CRIME
அதிர்ச்சி.. சம்பளம் வாங்கச் சென்ற இடத்தில் மர்மம்.. 7 வயது மகளுடன் மாயமான தாய்.. ஹைதராபாத்தில் பெரும் பரபரப்பு..!!!
ஹைதராபாத் நாகோல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜெய்ப்பூரி காலனியில் வசித்து வரும் சம்பங்கி சுரேஷ் என்பவரது மனைவி சுகுணா (35) மற்றும் அவரது 7 வயது மகள் நந்தினி ஆகியோர் திடீரென மாயமாகியுள்ளனர். கடந்த 6-ஆம் தேதி காலை 8:30 மணியளவில், தான் வேலை செய்யும் வீடுகளில் சம்பளப் பணத்தை வாங்கி வருவதாகக் கணவரிடம் கூறிவிட்டு, தனது மகளையும் அழைத்துக்கொண்டு சுகுணா வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார்.
நீண்ட நேரமாகியும் தாய் மற்றும் மகள் இருவரும் வீடு திரும்பாததால் பதற்றமடைந்த குடும்பத்தினர் அக்கம்பக்கத்தில் தீவிரமாகத் தேடிப் பார்த்துள்ளனர். எங்கு தேடியும் அவர்களைப் பற்றிய எந்தத் தகவலும் கிடைக்காததால், சுரேஷ் நாகோல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், மாயமான தாய் மற்றும் மகளைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
