CRIME
“என்னால் இனிப் படிப்பை தொடர முடியாது…” பெற்றோருக்கு வாட்ஸ்அப் மெசேஜ் அனுப்பிவிட்டு மாணவர் செய்த காரியம்.. அதிர்ச்சி பின்னணி..!!
ஹைதராபாத்தில் உள்ள ஜவஹர்லால் நேரு தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் படிப்பு அழுத்தத்தைத் தாங்க முடியாமல் பொறியியல் மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கம்மம் பகுதியைச் சேர்ந்த 19 வயதான விக்ரம் பாபு என்பவர், இப்பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்து வந்துள்ளார். இவருக்கு 11 பாடங்களில் அரியர் இருந்ததால், படிப்புச் சுமையைச் சமாளிக்க முடியாமல் கடும் மன உளைச்சலில் இருந்துள்ளார்.
இந்நிலையில், தனது பெற்றோர் மற்றும் சகோதரிக்கு வாட்ஸ்அப் மூலம் செய்தி ஒன்றை அனுப்பிய விக்ரம் பாபு, 11 அரியர்களுடன் தன்னால் பொறியியல் படிப்பைத் தொடர முடியவில்லை எனத் தெரிவித்துள்ளார். மன அழுத்தத்தின் காரணமாக அவர் எடுத்த இந்த முடிவு சக மாணவர்கள் மற்றும் குடும்பத்தினரிடையே பெரும் அதிர்ச்சியையும் ஆழ்ந்த சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
