CRIME
“தனது விருப்பத்திற்கு இணங்காவிட்டால் ‘அந்த’ புகைப்படத்தை வெளியிடுவேன்…” சீரியல் வாய்ப்பு கேட்டுச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. திடுக்கிடும் பின்னணி..!!
ஹைதராபாத் சம்ஷாபாத் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்குத் தொலைக்காட்சி சீரியல்களில் நடிக்க வாய்ப்பு வாங்கித் தருவதாகக் கூறி காளிதாஸ் என்ற நபர் ஏமாற்றி மிரட்டல் விடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சினிமா மற்றும் சீரியல் துறையில் வாய்ப்பு பெற்றுத் தருவதாக ஆசை வார்த்தை கூறிய காளிதாஸ், பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணுடன் நெருக்கமாகப் பழகியுள்ளார். இதனைப் பயன்படுத்திக் கொண்டு, அந்தப் பெண்ணின் அந்தரங்கப் புகைப்படங்களை அவர் ரகசியமாக எடுத்து வைத்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
இதனையடுத்து, காளிதாஸ் தனது உண்மை முகத்தைக் காட்டி அந்தப் பெண்ணை மிரட்டத் தொடங்கியுள்ளார். தான் அழைக்கும் இடத்திற்கு வந்து தனது விருப்பத்திற்கு இணங்காவிட்டால், அந்தப் புகைப்படங்களை வெளியிட்டுவிடுவதாகக் கூறி அவர் மிரட்டல் விடுத்துள்ளார். மேலும், இதற்கு ஒப்புக்கொள்ளாவிட்டால் கொலை செய்துவிடுவதாகவும் காளிதாஸ் மிரட்டியதாகப் பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
