CRIME
“வாசல் பெருக்கும்போது பார்த்தேன்… இரவில் புகுந்து இருவரையும் கொன்று சடலத்திடம் 5 முறை அத்துமீறினேன்..!” சைக்கோ கொலையாளியின் பகீர் வாக்குமூலம்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் கன்னோஜ் மாவட்டம் குர்சஹாய்கஞ்ச் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், தம்பதியரைக் கொடூரமாகக் கொலை செய்துவிட்டுப் பெண்ணின் சடலத்தைப் பலமுறை பாலியல் வன்கொடுமை செய்த கொடூரன் காவல்துறையினரால் சுட்டுப் பிடிக்கப்பட்டுள்ளான். கடந்த நவம்பர் 4-ஆம் தேதி இரவு நடந்த இந்த இரட்டைக் கொலைச் சம்பவம் தொடர்பாக, ஞாயிற்றுக்கிழமை குற்றவாளியின் இரண்டு கால்களிலும் சுட்டுப் பிடித்த கன்னோஜ் போலீசார் அவனிடம் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, ஒருநாள் அந்தப் பெண் வீட்டின் வாசலில் பெருக்கிக் கொண்டிருந்ததைப் பார்த்தபோதே தன் மனதில் தவறான எண்ணம் ஏற்பட்டதாகவும், அதன்பிறகு தினமும் அவளது வீட்டிற்கு அருகில் சென்று ரகசியமாக நோட்டமிட்டு வந்ததாகவும் அந்தக் கொடூரன் வாக்குமூலம் அளித்துள்ளான்.
சம்பவத்தன்று இரவு சரியான சந்தர்ப்பத்திற்காகக் காத்திருந்து வீட்டிற்குள் புகுந்தபோது, கணவனும் மனைவியும் தனித்தனியே உறங்கிக் கொண்டிருந்ததாகவும், சத்தம் கேட்டு விழித்துக்கொண்ட கணவனை முதலில் கொலை செய்ததாகவும் அவன் தெரிவித்துள்ளான். அதனைத் தொடர்ந்து விழித்துக்கொண்ட அந்தப் பெண்ணையும் கொலை செய்துவிட்டு, உயிரற்ற அவளது சடலத்தை 4 முதல் 5 முறை பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்தச் சைக்கோ கொலையாளி அளித்த பகீர் வாக்குமூலம் காவல்துறையினரையே அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. இதே பாணியில் ஏற்கெனவே தாய் மற்றும் மகள் ஆகிய இருவரைக் கொலை செய்த கொடூரப் பின்னணியும் இவனுக்கு இருப்பது குறிப்பிடத்தக்கது.
