LATEST NEWS
“அங்க மட்டும் பிரசாரத்துக்கு போகாதீங்க…” வேட்பாளர்களுக்கு வந்த சீக்ரெட் ஆர்டர்… இடைத்தேர்தலில் தவெக போட்ட மாஸ்டர் பிளான்… ஷாக்கில் எதிர்த்தரப்பு..!!
தமிழக அரசியலில் களம் கண்டுள்ள தமிழக வெற்றி கழகம் , வரவிருக்கும் இடைத்தேர்தலில் சுமார் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றி பெற வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு தீவிரமாக வியூகம் வகுத்து வருகிறது. இந்த இலக்கை எட்டுவதற்காக கட்சியின் முக்கிய தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தொகுதி முழுவதும் களமிறங்கி தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மக்களின் ஆதரவைக் கவரும் வகையில் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பதோடு, புதிய தேர்தல் உத்திகளையும் தவெக கையிலெடுத்துள்ளது தொகுதி மக்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
அதேவேளையில், அதிமுகவில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பிறகு, பதவியை ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் மீது பொதுமக்கள் கடும் அதிருப்தியில் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மக்கள் எதிர்ப்பைச் சமாளிக்கும் வகையில், அதிக எதிர்ப்பு நிலவும் பகுதிகளுக்கு நேரில் சென்று பிரசாரம் செய்வதைத் தவிர்க்குமாறு வேட்பாளர்களுக்குக் கட்சித் தலைமை அறிவுறுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. ஒரே தொகுதியில் எதிரெதிர் வியூகங்களோடு களம் காணும் இரு துருவங்களின் இந்த நகர்வுகள், இடைத்தேர்தல் களத்தைச் சூடேற்றியுள்ளன.
