இப்படியா கத்துவது..? கொஞ்சம் கூட மரியாதையே இல்லையா..? மைதானத்திலேயே கேப்டன் பவுமாவுடன் நேருக்கு நேர் மோதிய டி காக்..! வைரலாகும் ஷாக்கிங் வீடியோ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

இப்படியா கத்துவது..? கொஞ்சம் கூட மரியாதையே இல்லையா..? மைதானத்திலேயே கேப்டன் பவுமாவுடன் நேருக்கு நேர் மோதிய டி காக்..! வைரலாகும் ஷாக்கிங் வீடியோ..!!

Published

on

தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது, தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா மற்றும் விக்கெட் கீப்பர் குவின்டன் டி காக் ஆகிய இருவருக்கும் இடையே மைதானத்தில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன் சேவியர் பார்ட்லெட் பேட்டிங் செய்தபோது, பந்து லெக் ஸ்டம்பிற்கு வெளியே செல்வதாகக் கருதி டி காக் ரிவியூ எடுக்கத் தயங்கினார். ஆனால், பந்துவீச்சாளர் லிஸாத் வில்லியம்ஸ் வலியுறுத்தியதால் கேப்டன் பவுமா உடனடியாக ரிவியூ எடுக்க முடிவெடுத்தார். பவுமாவின் இந்த முடிவால் கோபமடைந்த டி காக், பந்து லெக் ஸ்டம்பை விட்டு விலகிச் செல்கிறது என்று கேப்டனைப் பார்த்து மைதானத்திலேயே கத்தினார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் தீவிரமடைந்து, சக வீரர்கள் தலையிட்டு அவர்களை அமைதிப்படுத்தினர்.

இறுதியில் கேப்டன் டெம்பா பவுமா எடுத்த ரிவியூ முடிவிற்கு சாதகமாக அமைந்தது. ‘பால் டிரேக்கிங்’ தொழில்நுட்பத்தில் பந்து ஸ்டம்பில் படுவது தெளிவாகத் தெரிந்ததால், நடுவர் தனது முடிவை மாற்றி பேட்ஸ்மேனை எல்.பி.டபிள்யூ முறையில் அவுட் என அறிவித்தார். எனினும், ஒரு சிறிய கருத்து வேறுபாட்டிற்காக அணியின் கேப்டனைப் பார்த்து மைதானத்தில் பகிரங்கமாகக் கத்திய டி காக்கின் நடவடிக்கை ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Advertisement

இந்தச் சம்பவத்தின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, ரசிகர்களும் இணையவாசிகளும் குவின்டன் டி காக்கைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். போட்டி சூழலில் கருத்து வேறுபாடுகள் வருவது இயல்பு என்றாலும், கேப்டனின் முடிவிற்கு மதிப்பளித்து அமைதியாகக் கையாண்டிருக்க வேண்டும் என்று ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர். அதேவேளையில், சில ரசிகர்கள் இது போன்ற காரசாரமான விவாதங்கள் மூத்த வீரர்களுக்கு இடையே அவ்வப்போது நடப்பது சாதாரண ஒன்றுதான் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in