LATEST NEWS
தமிழக அரசியலில் திடீர் திருப்பம்.! “கட்சியிலிருந்து விலகுகிறேன்” பதவியை ராஜினாமா செய்தார் நெல்லை முபாரக்..!!
எஸ்டிபிஐ (SDPI) கட்சியிலிருந்து விலகுவதாக அக்கட்சியின் தமிழக மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
கடினமான மற்றும் கசப்பான சூழலில் கட்சியில் தொடர்ந்து பயணிக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளதால், கட்சியின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கடந்த 9 ஆண்டுகளாக எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவராகப் பதவி வகித்து வந்த நெல்லை முபாரக், கடந்த 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
