LATEST NEWS
“அம்மா ஆட்சியாக இருந்தா கலெக்டர் எலும்பை ஒடச்சிருப்பாங்க” ஆனா முதல்வர் விஜய் தீபாவளி பரிசு கொடுக்காரு.. ஆளுங்கட்சி மீது ஜெயக்குமார் கடும் தாக்கு..!!
மாவட்ட ஆட்சியருக்கு ஏற்பட்ட அவமரியாதை விவகாரத்தில் தற்போதைய அரசை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக விமர்சித்துள்ளார். இதுவே மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா (அம்மா) ஆட்சியாக இருந்திருந்தால், மாவட்ட ஆட்சியருக்கு இத்தகைய நிலை ஏற்பட்டிருக்காது என்றும், தவறு செய்தவர்களின் எலும்பை உடைத்திருப்பார்கள் என்றும் அவர் ஆவேசமாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், தற்போதைய ஆட்சியாளர்கள் தவறு செய்தவர்களைக் கண்டிக்காமல் அவர்களுக்குத் தீபாவளிப் பரிசு கொடுத்து ஊக்குவிப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், இந்த ஆட்சியின் நிர்வாகக் குறைபாடுகளையும் தவறுகளையும் பட்டியலிடத் தொடங்கினால் அதற்கு ஒரு மணி நேரத்திற்கும் மேலாகும் என அவர் சாடியுள்ளார்.
தற்போதைய ஆட்சியின் செயல்பாடுகளைப் பார்த்துப் பொதுமக்கள் மிகுந்த ஏமாற்றமடைந்துள்ளதாகவும் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். “தெரியாமல் ஓட்டுப் போட்டுவிட்டோமே” என மக்களே இப்போது நினைத்து வருந்துவதாகவும் அவர் தனது பேட்டியில் கடுமையாக விமர்சித்துள்ளார்.
