“கட்சியை விட்டுப் போகணும்னா போங்க” சீனியர் மா.செ.,க்களுக்கு ஸ்டாலின் கறார் எச்சரிக்கை.. பரபரப்பில் அறிவாலயம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“கட்சியை விட்டுப் போகணும்னா போங்க” சீனியர் மா.செ.,க்களுக்கு ஸ்டாலின் கறார் எச்சரிக்கை.. பரபரப்பில் அறிவாலயம்..!!

Published

on

திமுகவில் நடைபெற்று வரும் கட்சி மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு மூத்த மாவட்டச் செயலாளர்கள் சிலர் முட்டுக்கட்டை போடுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கட்சி நிர்வாகத்தை வலுப்படுத்தத் தலைமை எடுக்கும் முயற்சிகளுக்குச் சீனியர்கள் தரப்பில் அதிருப்தி நிலவுவதாகக் கூறப்படுகிறது.

ஆனால், கட்சி நலன் கருதி எடுக்கப்படும் இந்த நடவடிக்கைகளில் இனி யாரிடமும் சமரசம் பேசத் தயாராக இல்லை என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கறார் காட்டுவதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சீரமைப்பு நடவடிக்கைகளுக்கு உட்பட்டுக் கட்சியில் இருப்பவர்கள் இருக்கலாம் என்றும், விருப்பமில்லாதவர்கள் விலகிச் செல்லலாம் என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

Advertisement

தலைமையின் இந்தக் கடுமையான நிலைப்பாடு காரணமாக, அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட சில மூத்த நிர்வாகிகள் தற்போது அமைதி காப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. இவர்களின் இந்த ‘சைலண்ட் மோட்’ போக்கு கட்சிக்குள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in