LATEST NEWS
எமனாக மாறிய திருமண பேனர்.. கண் இமைக்கும் நேரத்தில் பறிபோன கணவரின் உயிர்… உயிருக்குப் போராடும் மனைவி.. திருவள்ளூரில் சோகம்..!!
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே திருமண நிகழ்ச்சிக்காக வைக்கப்பட்டிருந்த பேனர் பலத்த காற்றில் சரிந்து விழுந்ததில் கோர விபத்து ஏற்பட்டுள்ளது. அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த தம்பதி மீது பேனர் விழுந்ததால், அவர்கள் நிலைதடுமாறி சாலையில் கீழே விழுந்தனர்.
அப்போது பின்னால் வந்த டிப்பர் லாரி ஒன்று கீழே விழுந்த தம்பதி மீது எதிர்பாராத விதமாக மோதியது. இந்தப் பயங்கர விபத்தில் படுகாயமடைந்த கணவர் செஞ்சய்யா (38) சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
விபத்தில் பலத்த காயமடைந்த அவரது மனைவி ரேணுகா (34) உடனடியாக மீட்கப்பட்டு, திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தத் துயரச் சம்பவம் குறித்து ஊத்துக்கோட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
