LATEST NEWS
வெளிநாட்டில் பதுங்கியிருக்கும் திமுகவின் பவர் சென்டர்’ ரத்தீஷ்.. இண்டர்போல் விரித்த வலை.. விரைவில் சிக்குவார்..? பரபரப்புப் பின்னணி.!!
கடந்த திமுக ஆட்சியில் அதிகார மையமாகச் செயல்பட்டதாகக் கூறப்படும் ரத்தீஷ் என்பவருக்கு எதிராக, தற்போது இண்டர்போல் (Interpol) அமைப்பு ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. முன்னதாகச் சட்டசபையில் பேசிய தமிழக முதலமைச்சர் விஜய், டாஸ்மாக் தொடர்பான பல முக்கிய உத்தரவுகளை ரத்தீஷ்தான் பிறப்பித்துள்ளார் என்றும், ‘யார் அந்த ரத்தீஷ்?’ என்றும் கேள்வி எழுப்பியிருந்தார்.
தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்ததைத் தொடர்ந்து, ரத்தீஷ் இந்தியாவிலிருந்து வெளியேறி வெளிநாட்டிற்குத் தப்பிச் சென்று தலைமறைவானார். தற்போது அவர் துபாயில் தங்கியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரூ.1,000 கோடி டாஸ்மாக் ஊழல் வழக்கில் ரத்தீஷ் முக்கியக் குற்றவாளியாகத் தேடப்பட்டு வருகிறார். இந்த ஊழல் விவகாரம் தொடர்பாகத் தமிழகக் காவல்துறையும் தீவிர விசாரணை மேற்கொண்டு அவரைத் தேடி வருகிறது.
ஏற்கனவே அமலாக்கத்துறை சார்பில் ரத்தீஷுக்கு எதிராக ‘லுக் அவுட்’ (Lookout) நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது சர்வதேச காவல்துறையான இண்டர்போல் ரெட் கார்னர் நோட்டீஸ் விடுத்துள்ளதால், அவர் விரைவில் கைது செய்யப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
