“சினிமாவை மிஞ்சும் ஃபேமிலி பிசினஸ்..” வாகனச் சோதனையில் சிக்கிய பை… உள்ளே பிரித்துப் பார்த்த போலீசுக்குக் காத்திருந்த அதிர்ச்சி.. போலீஸை அதிரவைத்த ‘கோலமாவு கோகிலா’ கும்பல்..!! – cinefeeds
Connect with us

CRIME

“சினிமாவை மிஞ்சும் ஃபேமிலி பிசினஸ்..” வாகனச் சோதனையில் சிக்கிய பை… உள்ளே பிரித்துப் பார்த்த போலீசுக்குக் காத்திருந்த அதிர்ச்சி.. போலீஸை அதிரவைத்த ‘கோலமாவு கோகிலா’ கும்பல்..!!

Published

on

கோலமாவு கோகிலா’ திரைப்பட பாணியில், டெல்லியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பல கோடி ரூபாய் மதிப்பிலான ஹெராயின் போதைப்பொருளைக் கடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போதையில்லா இந்தியாவை உருவாக்கும் நோக்கில் டெல்லி காவல்துறையின் போதைப்பொருள் ஒழிப்புப் படையினர் டெல்லி மற்றும் என்.சி.ஆர் பகுதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, காவல் உதவி ஆய்வாளர் விபின் ரதி தலைமையிலான குழுவினர் சிக்னேச்சர் பிரிட்ஜ் பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த இரண்டு இருசக்கர வாகனங்களை மடக்கிப் பிடித்து விசாரித்ததில், ரோகித் திவாகர், அவரது மனைவி மற்றும் சகோதரர் விஷால் திவாகர் ஆகிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரும் பையில் போதைப்பொருளை மறைத்து வைத்துக் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இவர்களிடமிருந்து முதற்கட்டமாக 2 கிலோ ஹெராயின் மற்றும் இருசக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்த காவல்துறையினர், போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், இவர்களுடன் தொடர்பில் இருந்த அப்ரோஜ் அலி, சிராக் மற்றும் கவுரவ் ஆகியோரைக் காவல்துறையினர் அடுத்தடுத்து கைது செய்தனர். இதில் விஷாலின் சகோதரன் அப்ரோஜ் அலி என்பதும், அலியின் மாமா இம்ரான் மற்றும் விஷால் இருவரும் ஏற்கனவே போதைப்பொருள் வழக்கில் தேடப்படுபவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. மேலும், ரோகித்தின் மனைவியின் தாயார் மற்றும் சகோதரியும் போதைப்பொருள் வழக்கில் தொடர்புடையவர்கள் என்ற திடுக்கிடும் தகவலும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

Advertisement

அப்ரோஜ் அலியிடமிருந்து போதைப்பொருளை வாங்கி விற்பனை செய்து வந்த கவுரவ் மீது ஏற்கனவே 5 வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பலரும் கூட்டாகச் சேர்ந்து இந்தப் போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பில் ஈடுபட்டிருந்தது காவல்துறையினரையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த வழக்கில் மொத்தம் 6 பேரைக் கைது செய்துள்ள டெல்லி காவல்துறையினர், அவர்களிடமிருந்து சர்வதேச சந்தையில் சுமார் ரூ.5 கோடி மதிப்புள்ள 2.25 கிலோ ஹெராயின், ரூ.73,400 ரொக்கப் பணம், 2 கார்கள், 2 மோட்டார் சைக்கிள்கள், ஒரு ஸ்கூட்டி மற்றும் 5 செல்போன்களைப் பறிமுதல் செய்துள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in