என்னடா இது..? சாதாரண பெல்ட் என நினைத்த அதிகாரிகளுக்குக் காத்திருந்த அதிர்ச்சி… கொக்கியைத் திறந்ததும் வெளியே வந்த பயங்கரம் – டெல்லி ஏர்போர்ட்டில் பரபரப்பு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

என்னடா இது..? சாதாரண பெல்ட் என நினைத்த அதிகாரிகளுக்குக் காத்திருந்த அதிர்ச்சி… கொக்கியைத் திறந்ததும் வெளியே வந்த பயங்கரம் – டெல்லி ஏர்போர்ட்டில் பரபரப்பு..!!

Published

on

டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் , ஹாங்காங்கிலிருந்து சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூருக்கு இணைப்பு விமானம் மூலம் செல்லவிருந்த பயணி ஒருவரின் பெல்ட் கொக்கியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சிறிய கத்தியை மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை (CISF) அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். வெள்ளிக்கிழமை பயணிகளின் உடைமைகளை எக்ஸ்-ரே ஸ்கேனர் மூலம் சோதனை செய்தபோது, ஒரு பயணியின் பையில் வித்தியாசமான உலோகப் பொருள் இருப்பதைப் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் துல்லியமாகக் கண்டறிந்தார்.

இதனையடுத்து அந்தப் பையைத் தனியாகப் பிரித்து நேரடிச் சோதனைக்கு (Physical inspection) உட்படுத்தியபோது, உள்ளே இருந்த கருப்பு நிற உலோகப் பெல்ட் கொக்கிக்குள் மிக நுணுக்கமாக வடிவமைக்கப்பட்ட சிறிய கத்தி ஒன்று மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்தப் பெல்ட் கொக்கியைத் திறந்து உள்ளே இருந்த கூர்மையான கத்தியை வெளியில் எடுக்கும் வீடியோவை சி.ஐ.எஸ்.எஃப் (CISF) நிர்வாகம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் (X) தளத்தில் வெளியிட்டுள்ளது.

Advertisement

விமானப் பயணிகள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்பதால், கத்திகள் மற்றும் கூர்மையான ஆயுதங்களை விமானத்திற்குள் எடுத்துச் செல்லக் கடுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது. அன்றாடப் பயன்பாட்டுப் பொருட்களுக்குள் மறைத்து வைத்து கடத்த முயன்ற இந்த ஆயுதத்தை மிகுந்த விழிப்புணர்வுடன் கண்டறிந்து, பெரும் அசம்பாவிதத்தைத் தடுத்த பாதுகாப்புப் படை வீரருக்கு சி.ஐ.எஸ்.எஃப் நிர்வாகம் தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in