LATEST NEWS
“விருந்தினரிடம் பணமா?” பாகிஸ்தான் கடைக்காரரின் பாசத்தால் நெகிழ்ந்த சீக்கியர்… இணையத்தைக் கலக்கும் வைரல் வீடியோ…!!
பாகிஸ்தானில் உள்ள ஒரு கடையில் டூத் பிரஷ் வாங்கச் சென்ற இந்திய சீக்கியர் ஒருவரிடம், கடைக்காரர் காட்டிய அன்பும் உபசரிப்பும் அடங்கிய காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. டூத் பிரஷுக்குப் பணம் கொடுக்க முயன்ற சீக்கியரிடம், “நீங்கள் விருந்தினர், உங்களிடம் பணம் வாங்க மாட்டேன்” என்று கடைக்காரர் பாசத்துடன் கூறுகிறார்.
பணம் வாங்க மறுத்த நிலையிலும், சீக்கியர் 50 ரூபாய் இந்திய நோட்டைக் கொடுக்க முயல்கிறார். அதைப் பணமாக வாங்காமல், “உங்கள் நினைவாக இதை வைத்துக் கொள்கிறேன்” என்று கடைக்காரர் நகைச்சுவையாகக் கூறுவது அந்த இடத்தை மேலும் மகிழ்ச்சியாக்குகிறது. தொடர்ந்து பேசிய சீக்கியர், பஞ்சாப் எந்தப் பக்கத்தில் இருந்தாலும் அதன் மீதான அன்பு எப்போதும் மாறாது என்று உணர்வுப்பூர்வமாகக் குறிப்பிடுகிறார்.
இருவருக்கு இடையிலான இந்த இயல்பான மற்றும் பாசமான உரையாடல் நெட்டிசன்களின் மனதை வெகுவாகக் கவர்ந்துள்ளது. எல்லைகளைத் தாண்டி மனிதநேயத்தையும் பஞ்சாப் கலாச்சாரத்தின் மீதான பிணைப்பையும் வெளிப்படுத்தும் விதமாக இந்தக் காணொளி இருப்பதாகப் பலரும் பாராட்டி வருகின்றனர்.
