துணிக்கடை கொலை வழக்கில் திருப்பம்.. இளம்பெண்ணைத் தரதரவென இழுத்துச் சென்ற பகீர் காட்சிகள்.. வெளியானது அந்த அதிர்ச்சி CCTV வீடியோ..!! – cinefeeds
Connect with us

CRIME

துணிக்கடை கொலை வழக்கில் திருப்பம்.. இளம்பெண்ணைத் தரதரவென இழுத்துச் சென்ற பகீர் காட்சிகள்.. வெளியானது அந்த அதிர்ச்சி CCTV வீடியோ..!!

Published

on

தலைநகர் டெல்லியின் மோதி நகர் பகுதியில் உள்ள துணிக்கடையில் இளம்பெண் ஷப்னம் படுகொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பான பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. சனிக்கிழமை அன்று கடைக்குள் வந்த குற்றவாளி சூரஜ், ஷப்னமைத் தாக்கி மீண்டும் மீண்டும் அடிப்பதும், வலியால் அலறித் துடித்த ஷப்னம் கீழே அமர்ந்து தன்னைக் காப்பாற்றிக்கொள்ளத் தப்பிக்க முயல்வதும் அந்தக் காட்சிகளில் பதிவாகியுள்ளது. பின்னர், சூரஜ் அந்த இளம்பெண்ணின் தலைமுடியைப் பிடித்துத் தரதரவென ஆடை மாற்றும் அறைக்குள் இழுத்துச் சென்று கதவை மூடியுள்ளார். அங்கு அவர் மறைத்து வைத்திருந்த கூர்மையான ஆயுதத்தால் ஷப்னமைத் தாக்கிக் கொடூரமாகக் கொலை செய்துவிட்டுத் தப்பியோடியதாகத் தெரியவந்துள்ளது.

பேசுவது போல் நடித்துத் திட்டமிட்டே ஆயுதத்துடன் கடைக்கு வந்த சூரஜ், இதற்கு முன்பும் ஷப்னமுடன் தகராறில் ஈடுபட்டு அவரைத் தாக்கியதாக உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். இதனிடையே, சம்பவத்திற்குப் பிறகு தலைமறைவாக இருந்த கொலையாளி சூரஜை டெல்லி காவல்துறையினர் தற்போது அதிரடியாகக் கைது செய்துள்ளனர். கைப்பற்றப்பட்ட சிசிடிவி காட்சிகளை முக்கிய ஆதாரமாகக் கொண்டுள்ள போலீசார், கொலைக்கான முழுமையான பின்னணி மற்றும் நோக்கம் குறித்து சூரஜிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in