LATEST NEWS
சோனியா காந்தி விழாவில் எதிர்பாராத ட்விஸ்ட்… முதலமைச்சர் விஜய்யிடம் பிரியங்கா காந்தி வைத்த திடீர் கோரிக்கை.. 22 ஆண்டுகால ரகசியம் உடைந்தது…!!
டெல்லியில் நடைபெற்ற சோனியா காந்தியின் சுயசரிதை புத்தக வெளியீட்டு விழாவில், காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியின் வீட்டில் பணிபுரியும் பெண்ணின் 22 ஆண்டுகால நீண்ட நாள் ஆசையைத் தமிழக முதலமைச்சர் விஜய் நெகிழ்ச்சியுடன் நிறைவேற்றி வைத்துள்ளார்.
விழாவின் போது பிரியங்கா காந்தி, தன் வீட்டில் பல ஆண்டுகளாக விசுவாசமாகப் பணிபுரியும் அந்தப் பெண்ணை முதலமைச்சர் விஜய்யிடம் அழைத்துச் சென்று, அவருடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற அவரது நீண்ட நாள் விருப்பத்தைத் தெரிவித்தார்.
இதனைக் கேட்ட முதலமைச்சர் விஜய் சற்றும் தயங்காமல் புன்னகையுடன் அவரை அருகில் அழைத்து புகைப்படம் எடுத்துக்கொண்டதுடன், நலம் விசாரித்துத் தனது எளிமையை வெளிப்படுத்தினார். இந்த நெகிழ்ச்சியான தருணம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
