டெல்லியில் முகாமிட்ட தவெக முக்கியப் புள்ளிகள்!.. சி.எம். விஜய்யைத் தொடர்ந்து பறக்கும் என்.ஆனந்த்… பின்னணியில் இருக்கும் அந்த 4 முக்கியக் காரணங்கள் என்ன..? – cinefeeds
Connect with us

LATEST NEWS

டெல்லியில் முகாமிட்ட தவெக முக்கியப் புள்ளிகள்!.. சி.எம். விஜய்யைத் தொடர்ந்து பறக்கும் என்.ஆனந்த்… பின்னணியில் இருக்கும் அந்த 4 முக்கியக் காரணங்கள் என்ன..?

Published

on

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) முக்கியத் தலைவர்கள் அடுத்தடுத்து டெல்லி செல்வது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா மற்றும் ராஜ்மோகன் ஆகியோர் ஏற்கெனவே தலைநகரில் முகாமிட்டுள்ள நிலையில், முதலமைச்சர் விஜய் நேற்று டெல்லிக்குச் சென்றுள்ளார்.

இவர்களைத் தொடர்ந்து, மற்றொரு முக்கிய அமைச்சரான என். ஆனந்தும் நாளை டெல்லி செல்லவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இவ்வாறு கட்சியின் மற்றும் அரசின் முன்னணி முகங்கள் அடுத்தடுத்து டெல்லியில் கூடுவது பல்வேறு அரசியல் கேள்விகளையும் யூகங்களையும் எழுப்பியுள்ளது.

Advertisement

நம்பிக்கையில்லாத் தீர்மானம், மாநிலத்தின் சட்டம் – ஒழுங்கு விவகாரங்கள், நூலக ஊழல் புகார் மற்றும் மேகதாது அணைப் பிரச்னை உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கவும், மத்தியத் தலைவர்களுடன் பேசவுமே இவர்கள் டெல்லி சென்றுள்ளார்களா என அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in