“ஜவுளிக் கடை ட்ரையல் ரூமில் பகீர் கொ**” காதலை மறுத்ததால் 18 வயது இளம்பெண் கழுத்தறுத்துக் கொடூரம்… ஒருதலைக் காதலால் விபரீதம்..!! – cinefeeds
Connect with us

CRIME

“ஜவுளிக் கடை ட்ரையல் ரூமில் பகீர் கொ**” காதலை மறுத்ததால் 18 வயது இளம்பெண் கழுத்தறுத்துக் கொடூரம்… ஒருதலைக் காதலால் விபரீதம்..!!

Published

on

டெல்லி மோதி நகர் மெட்ரோ ரயில் நிலையம் அருகே உள்ள வஸ்த்ரா மஹால் ஜவுளிக் கடையில் பணிபுரிந்து வந்த 18 வயதான ஷப்னம் என்ற இளம்பெண், கடையின் ட்ரையல் அறையில் கழுத்தறுத்துக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார். சனிக்கிழமை இரவு 9 மணியளவில் கடையை மூடத் தயாரான ஊழியர்கள், ட்ரையல் அறையில் அவர் ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடப்பதைக் கண்டு காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.

மேற்கு டெல்லியைச் சேர்ந்த ஷப்னமை, அவரது நண்பரான சூரஜ் என்ற இளைஞர் ஒருதலையாகக் காதலித்து வந்ததாகவும், ஆனால் ஷப்னம் அந்தக் காதலை நிராகரித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும், கடந்த காலங்களிலும் சூரஜ் அவரை உடல் ரீதியாகத் துன்புறுத்தியதாகப் பெண்ணின் குடும்பத்தினர் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.

Advertisement

ஷப்னமின் பணி நேரம் முடியவிருந்த மாலை நேரத்தில், கூர்மையான ஆயுதத்துடன் ஷோரூமிற்கு வந்த சூரஜ், அவரிடம் பேச வேண்டும் எனக் கூறி ட்ரையல் அறைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு வைத்து ஷப்னமின் கழுத்தை அறுத்துக் கொன்றுவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றது காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள டெல்லி காவல்துறையினர், ஷப்னமின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தப்பியோடிய குற்றவாளி சூரஜைப் பிடிக்கத் தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருவதுடன், கடை மற்றும் அருகிலுள்ள பகுதிகளின் சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in