வேலிக்கு ஓணான் சாட்சி… துணிக்கடைக்குள் 18 வயது இளம்பெண்ணுக்கு நேர்ந்த பயங்கரம்.. கொலையாளி யார் என்று தெரிந்ததும் உறைந்து போன போலீஸ்.. பகீர் பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

வேலிக்கு ஓணான் சாட்சி… துணிக்கடைக்குள் 18 வயது இளம்பெண்ணுக்கு நேர்ந்த பயங்கரம்.. கொலையாளி யார் என்று தெரிந்ததும் உறைந்து போன போலீஸ்.. பகீர் பின்னணி..!!

Published

on

தலைநகர் டெல்லியின் மோதி நகர் மெட்ரோ ரயில் நிலையம் அருகே உள்ள ‘வஸ்திர மஹால்’ என்ற துணிக்கடையின் உடை மாற்றும் அறையில் 18 வயது இளம்பெண் கழுத்தறுத்துப் படுகொலை செய்யப்பட்ட கொடூரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த ஷப்னம் (18) என்ற அந்த இளம்பெண், அதே துணிக்கடையில் விற்பனையாளராகப் பணியாற்றி வந்துள்ளார். அவர் பணியில் இருந்தபோது கடைக்குள் வந்த சூரஜ் (29) என்ற இளைஞர், பேச வேண்டும் என்று கூறி ஷப்னமை உடை மாற்றும் அறைக்குள் அழைத்துச் சென்றுள்ளார். அங்கு இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட, ஆத்திரமடைந்த சூரஜ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஷப்னமின் கழுத்தை அறுத்துக் கொடூரமாகக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.

இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள டெல்லி காவல்துறையினர், தலைமறைவாக உள்ள கொலையாளி சூரஜைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், ஒருதலைக் காதல் விவகாரமே இந்தக் கொலைக்குக் காரணமாக இருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். மேலும், கொலையாளி சூரஜ் வேறு யாருமல்ல, ஷப்னமின் உறவினர் வழி மைத்துனர் ஆவார்; அதாவது ஷப்னமின் மூத்த சகோதரி, சூரஜின் மூத்த சகோதரரைத் திருமணம் செய்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. நெருங்கிய உறவினரே இளம்பெண்ணைத் துணிக்கடைக்குள் புகுந்து படுகொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in