LATEST NEWS
“செருப்பு கூட இல்லைனு சொன்னாரு.. இப்போ 50 லட்சம் கார்ல வராரு..?” தவெக எம்.எல்.ஏ வீடியோவை பகிர்ந்து திமுக ஐடி விங் தாக்கு..!!
2026 மே மாதம் நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்தொடரின் போது, கே.வி. குப்பம் தொகுதியின் தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர் தென்றல் குமார், தன்னிடம் கார் இல்லை என்றும் காலில் செருப்பு கூட இல்லாமல் அரசுப் பேருந்தில் சட்டசபைக்கு வருவதாகவும் ஊடகங்களிடம் தெரிவித்த காணொளி வெளியானது.
இந்நிலையில் நேற்று நவம்பர் 11 அன்று, எம்.எல்.ஏ தென்றல் குமார் த.வெ.க கொடி கட்டிய விலையுயர்ந்த காரில் செல்லும் காணொளியைப் பகிர்ந்து, தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணி இந்த விமர்சனத்தை முன்வைத்துள்ளது.
அவர்கள் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில், “ஆறு மாதத்திற்கு முன்பு கார் இல்லை என்றும் செருப்பு கூட இல்லை எனச் சட்டமன்ற வாசலில் கேமரா முன்பு ரீல்ஸ் போட்டவர் இன்று 50 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள காரில் வருகிறார். கேமரா முன்பு எப்படி பொய் பேச வேண்டும், நடிக்க வேண்டும் எனப் பனையூர் மூர்த்தி தற்குறிகள் அனைவருக்கும் பாடம் எடுத்திருப்பார் போல!” என தெரிவித்துள்ளது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.
