CRIME
“விபத்தா? இல்ல திட்டமிட்ட கொலையா..?” பெண் தோழியின் வீட்டில் 22 வயது இளைஞருக்கு நேர்ந்த மர்ம மரணம்.. அழிக்கப்பட்ட வாட்ஸ்அப் சாட்கள்.. கதி கலங்க வைக்கும் பின்னணி..!!
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரின் பித்தூர் பகுதியில், தொழிலதிபரின் 22 வயது மகன் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சம்பவ் கண்டேல்வால் (22) என்ற அந்த இளைஞர், தனது பெண் தோழியின் அடுக்குமாடிக் குடியிருப்பு வீட்டிற்குச் சென்றுள்ளார். அவர் அங்கு சென்ற சிறிது நேரத்திலேயே, அந்தக் குடியிருப்பின் ஆறாவது மாடியிலிருந்து கீழே விழுந்த நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். இது குறித்துப் பேசிய அந்தப் பெண்ணின் தாய்மாமன், இது எதிர்பாராத விதமாக நடந்த ஒரு விபத்து என்று தெரிவித்துள்ளார்.
ஆனால், இது விபத்து அல்ல திட்டமிட்ட கொலை எனச் சம்பவ் கண்டேல்வாலின் குடும்பத்தினர் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளனர். சம்பவ்வின் உடலில் காணப்படும் காயங்களும், அவரது செல்போனில் இருந்த உரையாடல்கள் திட்டமிட்டு அழிக்கப்பட்டிருப்பதும் இந்த மரணத்தில் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்துவதாக அவர்கள் கூறியுள்ளனர். ஆறாவது மாடியில் என்ன நடந்தது, செல்போன் தகவல்கள் அழிக்கப்பட்டது ஏன் என்ற பல்வேறு கேள்விகள் எழுந்துள்ள நிலையில், காவல்துறையினர் இது குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
