CRIME
“அடச்சீ..இப்படியும் ஒரு தாயா..?” சத் பூஜை பிரசாதத்திற்காக 4 வயது குழந்தைக்கு நேர்ந்த கொடூர முடிவு.. கதி கலங்க வைக்கும் பின்னணி..!!
பீகார் மாநிலம் சமஸ்திபூரில், சத் பூஜைக்காகத் தயாரிக்கப்பட்ட பிரசாதத்தைத் தூய்மையற்றதாக்கி விட்டதாகக் கூறி, 4 வயதுப் பெண் குழந்தையைத் தாயே அடித்துக் கொன்ற நெஞ்சை உலுக்கும் கொடூரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. சத் பூஜைக்கான பிரசாதத்தை அந்தச் சிறுமி தெரியாமல் தொட்டு அசுத்தப்படுத்தியதால், கடும் ஆத்திரமடைந்த தாய் ரீனா குமாரி, தனது 4 வயது மகள் என்றும் பாராமல் ஈவு இரக்கமின்றி மிகக் கொடூரமாகத் தாக்கியுள்ளார்.
தாயின் இந்தக் கொடூரத் தாக்குதலில் அந்தப் பச்சிளம் குழந்தை பலத்த காயமடைந்து உயிருக்குப் போராடியுள்ளது. இதையடுத்துக் குடும்பத்தினர் குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர், ஆனால் அங்குச் சிகிச்சை பலனின்றி அந்தச் சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர், குழந்தையை அடித்துக் கொன்ற தாய் ரீனா குமாரியைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
