ஐயோ கடவுளே.. 5 முறை பல்டியடித்து 20 மீட்டர் பள்ளத்தில் விழுந்த கார்.. ஏர்பேக் திறந்தும் உயிரிழந்த 4 இளம் நண்பர்கள்… நெஞ்சை உலுக்கும் சோகம்..!! – cinefeeds
Connect with us

CRIME

ஐயோ கடவுளே.. 5 முறை பல்டியடித்து 20 மீட்டர் பள்ளத்தில் விழுந்த கார்.. ஏர்பேக் திறந்தும் உயிரிழந்த 4 இளம் நண்பர்கள்… நெஞ்சை உலுக்கும் சோகம்..!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் பல்லியா மாவட்டத்தில், சனிக்கிழமை இரவு ஏற்பட்ட கோர சாலை விபத்தில் காரில் பயணித்த நான்கு நண்பர்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சந்தைக்குச் சென்றுவிட்டு நால்வரும் காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, சுமார் 100 கிலோமீட்டர் வேகத்தில் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மரத்தில் பயங்கரமாக மோதியது. இந்த மோதலின் வேகத்தில் கார் ஐந்து முறை தலைகீழாகப் புரண்டு, சுமார் 20 மீட்டர் தொலைவில் இருந்த பள்ளத்தில் போய் விழுந்தது. விபத்தின் போது காரின் ஏர்பேக்குகள் திறந்தபோதிலும், தாக்கம் மிகக் கடுமையாக இருந்ததால் உள்ளே சிக்கிக்கொண்ட அபிஷேக் படேல் (29), குணால் பாஸ்வான் (22), கோலு தாக்கூர் (23) மற்றும் தனஞ்செய் (26) ஆகிய நால்வரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினரும் உள்ளூர் பொதுமக்களும், நொறுங்கிய காரின் கதவுகளை உடைத்து நால்வரின் உடல்களையும் மீட்டனர். உயிரிழந்தவர்களில் அபிஷேக் படேல் உத்தரகாண்ட் ஐ.ஐ.எம் நிறுவனத்தில் உதவி மேலாளராகப் பணியாற்றி வந்ததுடன், அவருக்குத் திருமணமாகி ஆறு மாதங்களே ஆகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், ஐ.டி.ஐ முடித்த குணால் ரயில்வே தேர்வுகளுக்கும், தனியார் ஆசிரியரான தனஞ்செய் அரசு ஆசிரியர் பணித் தேர்வுகளுக்கும், கோலு தாக்கூர் ராணுவம் மற்றும் காவல்துறைப் பணிகளுக்கும் தீவிரமாகத் தயாராகி வந்துள்ளனர். எதிர்காலக் கனவுகளுடன் பயணித்த நான்கு இளைஞர்களின் திடீர் மரணம் அவர்களது குடும்பத்தினரையும் அப்பகுதி மக்களையும் ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in