“30 தவெக எம்எல்ஏக்கள் அதிருப்தி?” கவிழப்போகும் ஆட்சி.. அதிமுக வசமாகும் தமிழ்நாடு – செல்லூர் ராஜு பகீர்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“30 தவெக எம்எல்ஏக்கள் அதிருப்தி?” கவிழப்போகும் ஆட்சி.. அதிமுக வசமாகும் தமிழ்நாடு – செல்லூர் ராஜு பகீர்..!!

Published

on

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) ஆட்சி இனி நீடிக்காது என்று முன்னாள் அமைச்சரும் அதிமுக மூத்த நிர்வாகியுமான செல்லூர் ராஜு மதுரையில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். ஆட்சி அமைந்து 6 மாதங்களே ஆன நிலையில், தமிழகத்தில் நிர்வாகத் திறனற்ற ஆட்சி நடைபெறுவதாகவும், சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்த ஆட்சிக்கு எதிராகப் பிரதமர் நரேந்திர மோடி விரைவில் சாட்டையைச் சுழற்றப் போகிறார் என்று செல்லூர் ராஜு குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் தமிழகத்திற்கு உண்மையான விடியல் கிடைக்கும் என்றும், விரைவில் மீண்டும் அதிமுக ஆட்சி மலரும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Advertisement

மேலும், தவெக அரசில் அமைச்சர் பதவி வழங்கப்படாத காரணத்தால் அக்கட்சியைச் சேர்ந்த சுமார் 30 சட்டமன்ற உறுப்பினர்கள் (MLA-க்கள்) கடும் அதிருப்தியில் உள்ளதாக அவர் கூறியுள்ளார். அதிருப்தியில் உள்ளவர்களைச் சமாதானப்படுத்தவே முதலமைச்சர் விஜய் அவர்களை அழைத்துப் பேசியதாகவும், இந்த ஆட்சி ஐந்து ஆண்டுகளை நிறைவு செய்யாமல் விரைவில் கலைந்துவிடும் என்றும் செல்லூர் ராஜு விமர்சித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in