“கொஞ்சம் பொறுமையா இருப்பா..” பதவி கிடைக்காத அதிருப்தியில் ரவீந்திரநாத்.. தவெக-வில் இணைய துடிக்கும் மகனைக் கட்டுப்படுத்திய ஓபிஎஸ்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“கொஞ்சம் பொறுமையா இருப்பா..” பதவி கிடைக்காத அதிருப்தியில் ரவீந்திரநாத்.. தவெக-வில் இணைய துடிக்கும் மகனைக் கட்டுப்படுத்திய ஓபிஎஸ்..!!

Published

on

முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தின் மகன் ஓ.பி. ரவீந்திரநாத், திமுகவில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய முடிவு செய்திருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பரவலான தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் திமுகவிற்கு ஆதரவு தெரிவித்து வரும் போதிலும், அவர்களுக்குக் கட்சியில் இதுவரை எவ்வித முக்கியப் பதவிகளும் ஒதுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் கடும் அதிருப்தியடைந்த ரவீந்திரநாத், தவெகவில் இணைந்து தனது அரசியல் எதிர்காலத்தைத் தொடரலாம் எனத் தன் தந்தைக்குத் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருவதாகத் தெரிகிறது.

இருப்பினும், இந்த அதிரடி முடிவை உடனடியாக எடுக்க வேண்டாம் என்றும், சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வரை சிறிது காலம் பொறுத்திருக்குமாறும் ரவீந்திரநாத்தை ஓ. பன்னீர்செல்வம் சமாதானப்படுத்தி வைத்துள்ளதாகத் தேனி மாவட்ட அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முந்தைய நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட பிறகு ஓபிஎஸ் தரப்பு திமுகவுடன் இணக்கமான போக்கைக் கடைப்பிடித்து வந்த நிலையில், தற்போது அவரது மகன் தவெகவை நோக்கிக் காய் நகர்த்தி வருவது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in