CRIME
“3 பேர் சேர்ந்து மாறி மாறி” அந்த வார்த்தையை சொல்லி சொல்லி…. 14 வயது சிறுமியை மற்ற ஆண்களுக்கு இரையாக்கிய காதலன்… சிங்கப்பூரை உலுக்கிய அதிர்ச்சி சம்பவம்..!!
சிங்கப்பூரில் 14 வயது சிறுமியை இணையதளம் வழியாகக் காதலிப்பதாக ஏமாற்றி, கட்டாயப்படுத்தி மூவர் பாலியல் உறவில் ஈடுபடுத்திய 39 வயது திருமணமான நபரின் கொடூரச் செயல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஏற்கனவே குழந்தைகள் மீதான பாலியல் குற்றத்துக்காகச் சிறை தண்டனை அனுபவித்து விடுதலையான அந்த நபர், 2022-ஆம் ஆண்டு ஆன்லைன் செயலி மூலம் அப்போதைய 14 வயது பள்ளிச் சிறுமியுடன் பழக்கம் ஏற்படுத்தியுள்ளார். தான் மனைவியை விவாகரத்து செய்யப்போவதாகப் பொய் கூறி அச்சிறுமியைத் தன் காதல் வலையில் வீழ்த்தியுள்ளார்.
அதன் பிறகு, அந்த நபர் தனது நண்பர்கள் மற்றும் அறிமுகமில்லாத நபர்களுடன் சேர்ந்து மூவர் பாலியல் உறவில் ஈடுபடுமாறு சிறுமியை வற்புறுத்தியுள்ளார். ஆரம்பத்தில் அச்சிறுமி இதற்கு மறுப்பு தெரிவித்தபோதிலும், “உறவை முறித்துக் கொண்டு பிரிந்து சென்றுவிடுவேன்” என மிரட்டியும், குற்றவுணர்ச்சிக்கு ஆளாக்கியும் கட்டாயப்படுத்தியுள்ளார். வேறு வழியின்றித் தன் காதலைக் காப்பாற்றிக் கொள்ள ஒப்புக்கொண்ட அச்சிறுமியை, 2022 முதல் 2024 வரை செயலி மூலம் பிற ஆண்களுக்கு இரையாக்கி, பலமுறை இந்த பாலியல் கொடூரத்தை அரங்கேற்றியதுடன் அதற்காகப் பணமும் பெற்றுள்ளார்.
2025-இல் அச்சிறுமி அந்த நபருடனான தொடர்பைத் துண்டித்து அவரை பிளாக் செய்த நிலையில், கோபமடைந்த அந்நபர் சிறுமியைத் தாக்கியுள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி நடந்த சம்பவங்கள் குறித்துத் தன் தாயிடம் கூறவே, தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில் ஜூலை 2025-இல் கைது செய்யப்பட்ட அந்நபர் மீது பாலியல் துன்புறுத்தல் மற்றும் குழந்தைகள் கடத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட நிலையில், செப்டம்பர் 14 அன்று நீதிமன்றத்தில் அவர் தன் குற்றங்களை ஒப்புக்கொண்டுள்ளார்.
