CRIME
“ச்சீ…பெற்ற மகளுக்கு தந்தையே செய்த கொடூரம்..” வீட்டிற்குள் இருந்து வீசிய பயங்கர துர்நாற்றம்… கதவை உடைத்துப் பார்த்த போலீசாருக்குக் காத்திருந்த அதிர்ச்சி.. குலை நடுங்க வைக்கும் பின்னணி..!!
உத்தரப் பிரதேச மாநிலம் பதோஹியில் 20 வயது இளம் பெண் ஒருவரை அவரது பெற்ற தகப்பனே வீட்டின் மொட்டை மாடியில் உள்ள டின் ஷெட்டிற்குள் பூட்டி வைத்துச் சித்திரவதை செய்த கொடூரச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பல மாதங்களாக அப்பெண்ணிற்கு உணவோ, தண்ணீரோ வழங்கப்படாமல் தரையிலேயே படுக்க வைக்கப்பட்டிருந்ததால், அவரது இடுப்புக்குக் கீழுள்ள உடல் பகுதி மற்றும் எலும்புகள் அழுகத் தொடங்கியுள்ளன. போதிய பராமரிப்பு இல்லாததால் அவரது கால் நகங்கள் அசுர வேகத்தில் நீளமாக வளர்ந்திருந்ததோடு, உடல் முழுவதும் அழுக்கு சேர்ந்து வீட்டின் உள்ளிருந்து சகிக்க முடியாத துர்நாற்றம் வீசத் தொடங்கியுள்ளது.
துர்நாற்றம் தாங்க முடியாமல் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாகக் காவல் துறைக்குத் தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த போலீசார் பூட்டிய வீட்டை உடைத்து, மிகக் கொடூரமான நிலையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த அந்தப் பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். பெற்ற மகளையே மிருகத்தனமாகப் பூட்டி வைத்த அந்தப் பாவித் தந்தை மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், இந்த மனிதநேயமற்ற வெறிச்செயல் குறித்துப் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
