CRIME
மதுக்கடையில் கள்ளக்காதலனுடன் உல்லாசம்.. கையும் களவுமாகப் பிடித்து துப்பாக்கியை தூக்கிய கணவன்.. அடுத்த நொடியே நடந்த துயரம்.. போலீசாரை அதிரவைத்த சம்பவம்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் பிரோசாபாத்தில் தனது மனைவியையும், அவரது கள்ளக்காதலன் என்று சந்தேகிக்கப்படும் நபரையும் மதுக்கடையில் ஒன்றாகக் கண்ட கணவன், ஆத்திரமடைந்து துப்பாக்கியால் சுட்ட அதிர்ச்சிகரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. ரிஷப் என்று அடையாளம் காணப்பட்ட அந்த நபர், தனது மனைவி ஷிப்ராவும், சன்னி என்ற நபரும் ஒரு கடையில் அமர்ந்து ஒன்றாக மது அருந்துவதைப் பார்த்துள்ளார். இதனால் கோபத்தின் உச்சிக்குச் சென்ற ரிஷப், தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து அவர்கள் இருவரையும் நோக்கித் சரமாரியாகச் சுட்டுள்ளார்.
இந்தத் துப்பாக்கிச் சூட்டில், மனைவி ஷிப்ராவின் வயிறு, இடுப்பு மற்றும் விலா எலும்புகளில் ஐந்து குண்டுகள் பாய்ந்து பலத்த காயமடைந்தார். அவருடன் இருந்த சன்னியின் மார்பில் இரண்டு குண்டுகள் பாய்ந்தன. இந்த பயங்கரமான சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த காவல் துறையினர், துப்பாக்கிச் சூடு நடத்திய கணவன் ரிஷப்பை அதிரடியாகக் கைது செய்துள்ளனர். படுகாயமடைந்த இருவரும் தீவிர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
