CRIME
“அடிப்படை சட்டம் கூடத் தெரியாதா..?” ராணுவ வாகனத்திற்கு சலான் போட்ட பெண் போலீஸை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்.. இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ..!!
இந்திய ராணுவ வாகனத்திற்குப் பெண் போக்குவரத்து காவலர் ஒருவர் சட்டவிரோதமாக அபராதம் விதிக்கும் சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. 1988-ஆம் ஆண்டு மோட்டார் வாகனச் சட்டத்தின் ‘பிரிவு 18’-ன் படி, ஆயுதப்படைகளால் வழங்கப்படும் ஓட்டுநர் உரிமங்கள் இந்தியா முழுவதும் ராணுவ வாகனங்களை ஓட்டுவதற்குச் செல்லுபடியாகும்; இதற்குச் சாதாரண ஓட்டுநர் உரிமம் கட்டாயமில்லை. ஒருவேளை ராணுவ வாகனம் போக்குவரத்து விதிகளை மீறினால், சாதாரண போக்குவரத்து காவல்துறையினர் அந்த விதிமீறலைப் பதிவு செய்து, வாகன எண், நேரம் மற்றும் இடத்தை மட்டுமே குறித்துக் கொள்ள முடியும்; ஆனால், ராணுவ வாகனத்திற்கு நேரடியாக அபராதம் விதிக்க அவர்களுக்கு அதிகாரம் இல்லை.
போக்குவரத்து விதிமீறல் குறித்த அந்தத் தகவல்களைக் காவல்துறையினர் ராணுவ போலீசாருக்கோ அல்லது சம்பந்தப்பட்ட ராணுவத் தலைமையகத்திற்கோ மட்டுமே அனுப்பி வைக்க வேண்டும். அதன் அடிப்படையில், ராணுவ விதிகளின்படியும், கமாண்டிங் ஆபீசர் மட்டத்திலும் அடுத்தகட்ட ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்பதே சட்ட விதியாகும். ஆனால், இந்த அடிப்படை விதிகளைக் கூடத் தெரிந்து கொள்ளாமல் காவல்துறையில் ஆட்களைப் பணிக்கு அமர்த்துகிறார்களா என்ற கேள்வியையும், விமர்சனத்தையும் பொதுமக்கள் சமூக வலைதளங்களில் எழுப்பி வருகின்றனர்.
