“கண் இமைக்கும் நேரத்தில் வந்த எமன்..!” பைக் ஓட்டுநர் மீது ஏறிச் சென்ற ராட்சத லாரி… சம்பவ இடத்திலேயே துடிதுடித்த உயிர்.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!! – cinefeeds
Connect with us

CRIME

“கண் இமைக்கும் நேரத்தில் வந்த எமன்..!” பைக் ஓட்டுநர் மீது ஏறிச் சென்ற ராட்சத லாரி… சம்பவ இடத்திலேயே துடிதுடித்த உயிர்.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் ஜாலோன் மாவட்டத்தின் ஜான்சி-கான்பூர் நெடுஞ்சாலையில், கட்டுப்பாட்டை இழந்த லாரி ஒன்று மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மீது கொடூரமாக ஏறியதில் அந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ஓராயி பகுதியிலிருந்து ஜான்சி நோக்கி அந்த இளைஞர் தனது பைக்கில் சென்று கொண்டிருந்தபோது இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த எட் கோத்வாலி காவல் துறையினர், உயிரிழந்த இளைஞரின் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கான அடுத்தகட்ட நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளனர்.

இந்தக் கொடூர விபத்து ஜாலோனின் ஜக்ஹோலி கிராமத்தில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க் அருகே அரங்கேறியுள்ளது. விபத்தைத் தொடர்ந்து லாரி ஓட்டுநரின் அலட்சியப் போக்கைக் கண்டித்து அப்பகுதி பொதுமக்களிடையே கடும் கோபமும் கொந்தளிப்பும் ஏற்பட்டது. விபத்து நடந்த நெடுஞ்சாலைப் பகுதியில் சில மணி நேரம் பதற்றமான சூழல் நிலவியதை அடுத்து, போலீசார் அங்கு கூடிருந்த மக்களைக் கலைத்து நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in