LATEST NEWS
ஐயோ கொடுமையே..! பிறந்தநாளுக்கும் திருமணத்திற்கும் தயாரான வீடு… பிணமாக திரும்பிய ராணுவ வீரன்..! நெஞ்சை பிளக்கும் துயரம்..!!
ஒடிசா மாநிலம் ராயகடா மாவட்டத்தைச் சேர்ந்தவர் வி. தேஜா (வயது 31). இவர் அசாம் ரைபிள்ஸ் படைப்பிரிவைச் சேர்ந்த ராணுவ வீரர் ஆவார். இவர் நாகாலாந்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாகத் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே வீரமரணமடைந்தார். இன்னும் 2 நாட்களில் தனது 31-வது பிறந்தநாளையும், வரும் டிசம்பர் மாதம் திருமணத்தையும் எதிர்நோக்கியிருந்த நிலையில் இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
வரவிருக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தனது திருமணக் கொண்டாட்டங்களுக்காக 50 நாட்கள் விடுமுறையில் சொந்த ஊருக்கு வரவிருந்த நிலையில், அவரது மரணச் செய்தி குடும்பத்தினருக்குப் பேரிடியாக இறங்கியுள்ளது. பிறந்தநாள் மற்றும் திருமணக் கொண்டாட்டத்திற்குத் தயாராகிய வீடு, அவரின் இறுதிச் சடங்கிற்காகக் காத்திருப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டின் எல்லையைக் காத்தவர், தனது மறைவுக்குப் பின்பும் மற்றவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில் ஏற்கனவே உடல் உறுப்புகளைத் தானம் செய்ய ஒப்பந்தம் செய்திருப்பது ஒட்டுமொத்த நாட்டு மக்களையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வீரமரணமடைந்த ராணுவ வீரர் தேஜாவின் மறைவுக்கு ஒடிசா முதலமைச்சர் மோகன் சரண் மாஜி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் நவீன் பட்நாயக் ஆகியோர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.
