CRIME
அய்யோ கொடுமையே.. கட்டுப்பாட்டை இழந்து எமனாக வந்த லாரி.. அடுத்தடுத்து வாகனங்களை நொறுக்கிய கொடூரம்.. 3 பேர் பரிதாப பலி.. நெஞ்சை பதறவைக்கும் வீடியோ..!!
ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டம் பெர்ஹாம்பூர் அருகே உள்ள சமாகண்டி சக் பகுதியில், தேசிய நெடுஞ்சாலை 16-இல் ஒரு பயங்கர தொடர் விபத்து ஏற்பட்டுள்ளது. தவறான இடத்தில் அமைக்கப்பட்டிருந்த மீடியன் இடைவெளியைக் கடந்து, சர்வீஸ் சாலையை நோக்கிச் செல்ல எர்டிகா கார் ஒன்று முயன்றதாகக் கூறப்படுகிறது. அந்த நேரத்தில் அதிவேகமாக வந்த கனரக லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து, அங்கிருந்த எர்டிகா கார் மற்றும் பல இருசக்கர வாகனங்கள் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.
இந்தக் கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒரு அரசுப் பெண் ஊழியர் உயிரிழந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மேலும் இருவர் உயிரிழந்து மொத்தம் 3 பேர் மரணமடைந்துள்ளனர். மேலும் 6-க்கும் மேற்பட்டோர் மிகவும் ஆபத்தான நிலையில் பெர்ஹாம்பூரில் உள்ள எம்.கே.சி.ஜி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். லாரியின் பிரேக் செயலிழந்ததா அல்லது ஓட்டுநர் மதுபோதையில் இருந்ததே இந்த விபத்துக்குக் காரணமா என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
