CRIME
அம்மாடியோ.. அறையில் ரத்தவெள்ளத்தில் கிடந்த பெண்.. தனியார் விடுதியில் நள்ளிரவில் பயங்கரம்.. காலையில் வெளிவந்த அதிர்ச்சி உண்மை… பரபரப்பு பின்னணி..!!
ஆந்திர மாநிலம் அன்னமையா மாவட்டம் மதனப்பள்ளியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் பெண் ஒருவர் பீர்பாட்டிலால் குத்தி மிகக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்த பெண் கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் முளபாகல் பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்தத் துயரச் சம்பவம் புதன்கிழமை நள்ளிரவில் நடந்துள்ள நிலையில், வியாழக்கிழமை காலையில்தான் இது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இந்தக் கொடூரக் கொலையைச் செய்தவர் அந்தப் பெண்ணின் கணவரான நவீத் பாஷா என்பது தெரியவந்துள்ளது. மனைவியைக் கொலை செய்த பின்னர், அவர் ஒன் டவுன் காவல் நிலையத்திற்குச் சென்று போலீசாரிடம் சரணடைந்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த பயங்கர கொலைக்கான உண்மையான காரணம் என்ன என்பது குறித்து நவீத் பாஷாவைத் தங்களது காவலில் எடுத்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
