“குழந்தையைச் சுட்டுவிட்டு நானும் செத்துருவேன்..!” வளர்ப்புத் தந்தை செய்த பகீர் காரியம்.. சிறுவனை காப்பாற்ற போலீஸ் நடத்திய அதிரடி ஆபரேஷன்.. பதற வைக்கும் 8 மணி நேரப் போராட்டம்..!! – cinefeeds
Connect with us

CRIME

“குழந்தையைச் சுட்டுவிட்டு நானும் செத்துருவேன்..!” வளர்ப்புத் தந்தை செய்த பகீர் காரியம்.. சிறுவனை காப்பாற்ற போலீஸ் நடத்திய அதிரடி ஆபரேஷன்.. பதற வைக்கும் 8 மணி நேரப் போராட்டம்..!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் கன்னோஜில், குடும்பத் தகராறு காரணமாகத் தனது வளர்ப்பு மகனை 8 மணி நேரத்திற்கும் மேலாகத் துப்பாக்கி முனையில் பிணைக் கைதியாகப் பிடித்து வைத்திருந்த நபரைத் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்து, சிறுவனைக் காவல்துறையினர் பத்திரமாக மீட்டுள்ளனர்.

கன்னோஜ் பகுதியைச் சேர்ந்த மூன்று குழந்தைகளுக்குத் தாயான விதவைப் பெண் ஒருவர், மூன்று மாதங்களுக்கு முன்பு இளைஞர் ஒருவரை நீதிமன்றத் திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில், அண்மையில் கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அந்தப் பெண் கணவரைப் பிரிந்து மீண்டும் தனது குழந்தைகளிடம் திரும்பி வந்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த அவரது கணவர், வெள்ளிக்கிழமையன்று அத்துமீறி வீட்டிற்குள் புகுந்து குழந்தைகளைப் பிணைக் கைதிகளாகப் பிடித்து வைத்துக் கொண்டு மிரட்டல் விடுத்தார்.

Advertisement

அப்போது அந்தப் பெண்ணின் இரண்டு மகள்களும் சாமர்த்தியமாக அங்கிருந்து தப்பி ஓடிய நிலையில், அவரது சிறிய மகன் மட்டும் அந்த நபரிடம் சிக்கிக்கொண்டான். தகவலறிந்து பெரும் படையுடன் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினரிடம், “முதலில் குழந்தையைச் சுட்டுவிட்டு, நானும் சுட்டுக்கொள்வேன்” என அந்த நபர் தொடர்ந்து மிரட்டல் விடுத்துக் கொண்டிருந்தார். சுமார் 8 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்தப் பதற்றமான சூழலில், குழந்தையின் உயிருக்கு ஆபத்து ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில் கன்னோஜ் காவல்துறையினர் அந்த வளர்ப்புத் தந்தை மீது இரண்டு முறை துப்பாக்கிச் சூடு நடத்தி அவரை மடக்கிப் பிடித்ததோடு, சிறுவனை உயிருடன் பத்திரமாக மீட்டுள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in