CRIME
அடக் கொடுமையே.. 4 ஆண்டு காதலுக்குக் கிடைத்த ‘பரிசு’… முதலிரவுக்கு முன்பே பிரிந்த புதுமணத்தம்பதி.. கல்யாண மேடையில் மணமகன் செய்த காரியம்… அதிர்ச்சி சம்பவம்..!!
காலையில் திருமணம் முடிந்து, மாலையிலேயே மணமக்கள் பிரிந்த ஒரு அதிர்ச்சி சம்பவம் கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் நடந்துள்ளது. ராணுவ வீரரான ரூபன் (31) மற்றும் கேரள மாநிலம் பாரசாலையைச் சேர்ந்த 26 வயது இளம்பெண் ஆகிய இருவரும் கடந்த நான்கு ஆண்டுகளாக முகநூல் மூலம் காதலித்து வந்தனர். பெண்ணின் வீட்டில் முதலில் எதிர்ப்பு கிளம்பினாலும், பின்னர் சம்மதம் தெரிவித்ததை அடுத்து கடந்த திங்கட்கிழமை காலை இவர்களது திருமணம் கோலாகலமாக நடைபெற்றது.
அன்று மாலையே வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், திருமண மகிழ்ச்சியில் ரூபன் மது அருந்தியுள்ளார். அப்போது, மணமகளின் தந்தையை தனது தோளில் தூக்கிக்கொண்டு ரூபன் ஆடியதை அவர் தட்டிக்கேட்க, அது இருவருக்கும் இடையே வாக்குவாதமாக மாறியது. இதனைத் தடுத்த தன் மனைவியையும், அவரது தந்தையையும் ரூபன் தாக்கியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெண் வீட்டார், குளச்சல் காவல் நிலையத்தில் புகார் அளித்ததுடன், திருமணமான சில மணி நேரங்களிலேயே தங்களது மகளைத் திரும்ப வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.
