யார் இந்த மாயா குப்தா..? ஒரே ஒரு சவால்… 365 நாட்கள் தொடர் போராட்டம்… உலகப் புகழ்பெற்ற யூடியூபரை வியக்க வைத்த இந்தியப் பெண்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

யார் இந்த மாயா குப்தா..? ஒரே ஒரு சவால்… 365 நாட்கள் தொடர் போராட்டம்… உலகப் புகழ்பெற்ற யூடியூபரை வியக்க வைத்த இந்தியப் பெண்..!!

Published

on

யூடியூப் பிரபலம் மிஸ்டர் பீஸ்ட் தனக்கு அளித்த பரிசைக் கண்டு குஜராத்தைச் சேர்ந்த மாயா குப்தா என்பவர் நெகிழ்ச்சியடைந்துள்ளார். குஜராத்தின் சூரத் நகரைச் சேர்ந்த மாயா குப்தா, உலகின் முன்னணி யூடியூபர்களில் ஒருவரான மிஸ்டர் பீஸ்ட்டைச் சந்திக்க வேண்டும் என்ற விருப்பத்துடன் 365 நாட்கள் தொடர் சவாலை மேற்கொண்டார். தினமும் ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்கி, அந்தச் சேவையை வீடியோவாகப் பதிவு செய்து மிஸ்டர் பீஸ்ட்டை டேக் செய்து சமூக வலைதளங்களில் தொடர்ந்து பதிவிட்டு வந்தார்.

இந்த முயற்சியை 365 நாட்களாகத் தொடர்ந்து செய்து வந்த நிலையில், இவரது நற்செயல் மிஸ்டர் பீஸ்ட்டின் கவனத்தை ஈர்த்தது. இதையடுத்து, செப்டம்பர் மாதத்தில் மாயா குப்தாவின் விவரங்களைப் பெற்ற மிஸ்டர் பீஸ்ட், சவாலின் 365-வது நாளில் மாயா குப்தாவை நேரில் சந்திக்க ஒப்புக்கொண்டார். சவாலின் இறுதி நாளில் அவரை நேரில் சந்தித்த மிஸ்டர் பீஸ்ட், “கடந்த ஓராண்டாக மாயா தனது சமூகத்திற்குச் செய்து வந்த நற்செயல்களை நான் கவனித்தேன்” என்று கூறி பாராட்டைத் தெரிவித்தார்.

Advertisement

மேலும், மாயாவின் சமூகச் சேவையைத் தொடர்ந்து ஊக்குவிக்கும் வகையில் மிஸ்டர் பீஸ்ட் அவருக்கு 10,000 டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 9.5 லட்சம் ரூபாய்) தொகையைப் பரிசாக வழங்கினார். இந்த நெகிழ்ச்சியான சந்திப்பின் வீடியோ இணையத்தில் வைரலாகி, 6 கோடிக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. இந்தப் பணத்தை முழுமையாகத் தன் சொந்தப் பயன்பாட்டிற்கு வைக்காமல், ஏழை எளிய மக்களுக்குத் தொடர்ந்து உதவுவதற்காகப் பகிர்ந்தளிக்க உள்ளதாக மாயா குப்தா தெரிவித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in