LATEST NEWS
“நீங்கள் அவரைத்தான் தேடிப் போகணும்..!” ஷாருக் கானை இழுத்து முதல்வர் விஜய்யைச் சீண்டிய சீமான்.. நெல்லையில் அனல் பறந்த நாதக மேடை..!!
திருநெல்வேலியில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், முதல்வர் விஜய் மற்றும் பாலிவுட் நடிகர் ஷாருக் கான் ஆகியோரை ஒப்பிட்டுப் பேசிய கருத்துக்கள் தற்போது அரசியல் வட்டாரத்திலும் சமூக வலைதளங்களிலும் பேசுபொருளாகியுள்ளன.
பொதுக்கூட்ட மேடையில் ஆவேசமாக உரையாற்றிய அவர், பேசிய சீமான், நடிகர் விஜய் மீதான பெண் ரசிகர்களின் ஈர்ப்பு குறித்துக் குறிப்பிடுகையில், “பெண்கள் பலரும் ‘எனக்கு என் கணவரை விட விஜய்யைத்தான் மிகவும் பிடிக்கும்’ என்று கூறுகிறார்கள். எல்லாப் பெண்களும் ஏன் இவ்வாறு சொல்கிறார்கள்? அவர்கள் அப்படிச் சொல்வதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால் பாருங்கள், அவர்களில் ஒருவர் இப்போது அவருடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
நீங்கள் அவரைத்தான் தேடிக் கொண்டிருக்க வேண்டும்” எனப் பரபரப்பான கருத்தைப் பதிவு செய்துள்ளார்.மேலும், தனது பேச்சின்போது பாலிவுட் முன்னணி நடிகர் ஷாருக்கானையும் ஒப்பிட்டு சீமான் கருத்துத் தெரிவித்துள்ளார். சினிமா நட்சத்திரங்கள் மீதான ஈர்ப்பையும், தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் அரசியல் விமர்சனங்களையும் இணைத்து சீமான் பேசியுள்ள இந்த வீடியோ மற்றும் வார்த்தைகள் தற்போது இணையத்தில் வேகமாகப் பகிரப்பட்டு, ஆதரவாளர்கள் மற்றும் விமர்சகர்கள் இடையே சூடான விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
