LATEST NEWS
“ஐயோ… வந்துட்டாரே, கலாய்ப்பாரே”3 பைல் இருக்குன்னு தானேப்பா சொன்னேன் .. கல்வி விருது விழாவில் உதயநிதிக்கு முதலமைச்சர் விஜய் அதிரடி பதிலடி..!!
சென்னையில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் கட்ட கல்வி விருது வழங்கும் விழாவில், முதலமைச்சர் விஜய் கல்வித்துறை ஊழல் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் விமர்சனங்களுக்குப் பதிலளித்துப் பேசினார்.
சென்னை நீலாங்கரையில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கான தவெக கல்வி விருது விழா முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் உரையாற்றிய அவர், கல்வித்துறை மிகவும் முக்கியமானது என்பதால் அதில் நடக்கும் ஊழல்களைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியாது என்று தெரிவித்தார்.
பள்ளிகளின் பாதுகாப்பில் விளையாடியதாலேயே கடந்த காலங்களில் கும்பகோணம் போன்ற துயரச் சம்பவங்கள் நிகழ்ந்ததாக முதலமைச்சர் விஜய் சுட்டிக்காட்டினார். மாணவர்களின் எதிர்காலம் மற்றும் பாதுகாப்பில் எவ்வித சமரசமும் செய்ய முடியாது என்பதை வலியுறுத்தி அவர் இவ்வாறு பேசினார்.
மேலும், தன் மேஜையில் உள்ள 3 கோப்புகளைத் திறக்குமாறு விமர்சித்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கு, ‘3 கோப்புகள் இருப்பதாகத்தான் கூறினேன்’ எனப் பதிலளித்த விஜய், ‘ஐயோ… வந்துட்டாரே.. கலாய்ப்பாரே…’ என்ற பிரபல மீம் வசனத்தைக் குறிப்பிட்டு அவரை மறைமுகமாக விமர்சித்துப் பேசினார்.
