உச்சிப் பிள்ளையார் கோயிலில் தீபம் ஏற்றியது சரியா.. தவறா..? ஸ்தானீக பட்டர்கள் கைப்பட எழுதிய கடிதத்தில் இருக்கும் ரகசியம்..!! – cinefeeds
Connect with us

DEVOTIONAL

உச்சிப் பிள்ளையார் கோயிலில் தீபம் ஏற்றியது சரியா.. தவறா..? ஸ்தானீக பட்டர்கள் கைப்பட எழுதிய கடிதத்தில் இருக்கும் ரகசியம்..!!

Published

on

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், இம்முறை தீப மண்டபத்தில் அல்லாமல், மலை உச்சியில் உள்ளத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் வழக்கமான முறைப்படி எப்போதும் போல உச்சிப் பிள்ளையார் கோயில் மண்டபத்தின் மேலேயே தீபம் ஏற்றப்பட்டது. இதற்கு, கோயிலின் அறங்காவலர் குழு தீர்மானத்தின்படியே, வழக்கமாக ஏற்றும் இடத்தில் தீபம் ஏற்றப்பட்டது என கோயில் நிர்வாகம் தரப்பில் அறிக்கையும் அளிக்கப்பட்டது. அதேசமயம், தங்களிடம் ஆலோசிக்காமல் தங்களது பெயர்களையும் சேர்த்து கோயில் துணை ஆணையர் இந்த அறிக்கையை வெளியிட்டது மனவேதனையை தந்ததாக ஸ்தானீக பட்டர்கள் நேற்று தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இன்று மீண்டும் தங்கள் கைப்பட எழுதிய கடிதம் ஒன்றை ஸ்தானீக பட்டர்கள் வெளியிட்டுள்ளனர்.

அக்கடிதத்தில், இத்திருக்கோவிலில் 24.11.2026 அன்று நடைபெற்ற திருக்கார்த்திகை தீபத்திருநாள் குறித்து ஸ்தானிக பட்டர்கள் ஆகிய நாங்கள் திருக்கோயில் நிர்வாகம் கடிதத்தின் மூலம் கேட்டதற்கு இணங்க இக்கடிதத்தை அளிக்கிறோம். நாங்கள் தாலம் காலமாக கோயில் நிர்வாகத்துடன் ஒத்துழைத்தே எல்லா விதமான திருவிழாக்களையும் செய்து வருகிறோம். இந்த கார்த்திகை தீப திருவிழாவும் 1996ம் ஆண்டு முதல் உச்சிப் பிள்ளையார் கோயிலில் நிர்வாகத்தின் ஒத்துழைப்புடன் தான் செய்து வருகிறோம். இத்திருக்கோயிலின் மலைமீது கார்த்திகை தீபம் ஏற்றும் உச்சிப் பிள்ளையார் கோயில், ராஜகோபுரம், 16 காய் மண்டபம் அருகில் சொக்கப்பன் ஏற்றும் இடம், ஆகியன யாவும் ஒரே நேர்கோட்டில் அமைந்துள்ளது. மேற்படி உச்சிப்பிள்ளையார் மண்டபம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் மூலஸ்தான கருவறைக்கு நேர் மேல் உள்ளது. சுவாமியின் சிரசின் மேல் உள்ளதற்கு சமமாகும். மேலும் கார்த்திகை தீபம் ஏற்றும் உச்சிப் பிள்ளையார் தீப மண்டபம் உள்ள குன்று திருக்கோயிலின் மூலஸ்தான சிலா விக்ரகங்களாகிய பஞ்ச மூர்த்தி சிலை அமைந்துள்ள குடவரையின் மேல் உள்ளது.

Advertisement

1996ம் ஆண்டுமுதல் திருக்கோயிலின் வழிகாட்டுதலின் படியும் சைவ, சமய நெறிமுறைகளின் படியுமே இந்த தீப மண்டபத்தில் தான் கார்த்திகை தீபம் ஏற்றி வருகிறோம். இதையெல்லாம் கருத்தில்கொண்டு திருக்கோயில் தீபம் ஏற்றும் வழக்கமான உச்சிப்பிள்ளையார் கோயில் மண்டபத்தில் 24.11.2026 அன்று கார்த்திகை தீபம் ஏற்றலாம் எனவும், ஏற்கனவே இதுபோன்று எழுத்துப்பூர்வமான கருத்துரையை 07.11.2013ம் தேதியும், 04.12.2025ம் தேதியும் வழங்கியுள்ளோம். ஒவ்வொரு வருடமும் எங்களின் கருத்துக்களை வாய் மொழியாகவோ, தேவைப்பட்டால் எழுத்து மூலமாகவோ பெற்றுக்கொண்டு உச்சிப்பிள்ளையார் கோயில் தீபமண்டபத்தின் மேல் கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது. அவ்வாறு ஏற்றுவது வழக்கமாக பின்பற்றப்படும் நடைமுறைகளின் படியும், சைவ சமயம் சார்ந்த நெற்முறைகளின் படியும் சரியானதே. எங்களுடைய கருத்துரையின் படியும், சைவ சமய வழிபாட்டு நெறிமுறைகளின் படியும் உச்சிப்பிள்ளையார் கோயில் தீபமண்டபத்தில் தீபம் ஏற்றி வருகிறோம் எனக் குறிப்பிட்டுள்ளனர்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in