DEVOTIONAL
அட்ராசக்க..! அள்ள அள்ள குறையாத சொத்து யோகம்… கன்னி ராசிக்கு மாறும் சூரியன்.. சூரிய பகவானின் அருள் மழையில் நனையப் போகும் 4 ராசிகள் எது தெரியுமா?
செப்டம்பர் 17, 2026 முதல் அக்டோபர் 17, 2026 வரை சூரிய பகவான் கன்னி ராசியில் சஞ்சரிக்க உள்ளார். புதனால் ஆளப்படும் கன்னி ராசிக்குள் நுழையும் சூரியனின் இந்த பெயர்ச்சி, அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும், குறிப்பிட்ட நான்கு ராசிகளுக்கு தொழில் மற்றும் நிதி ரீதியாக உச்சகட்ட அதிர்ஷ்டத்தையும் அள்ளிக்கொடுக்கப் போகிறது. அந்த ராசிகள் பெறும் விரிவான பலன்கள் இதோ:
- மிதுனம் : சூரியன் உங்கள் ராசியின் 4-ஆம் வீட்டில் சஞ்சரிக்கிறார். இதனால் பணியிடத்தில் நீண்ட நாட்களாக இருந்த சிக்கல்களும், மனக்குழப்பங்களும் முடிவுக்கு வரும். வேலை தேடுபவர்களுக்கு தகுதியான நல்ல வேலைவாய்ப்புகள் அமையும். மாணவர்கள் கல்வியில் இருந்த தடைகள் நீங்கி தேர்வுகளில் எதிர்பார்த்த வெற்றியைப் பெறுவார்கள். பணக் கஷ்டங்கள் யாவும் தீர்ந்து, வாழ்க்கைத்துணையுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து நெருக்கம் அதிகரிக்கும்.
- கன்னி : சூரிய பகவான் உங்கள் ராசியின் முதல் வீட்டிற்குள் (லக்னம்) நுழைகிறார். இக்காலகட்டத்தில் நீங்கள் தொட்ட காரியங்கள் அனைத்திலும் மகத்தான வெற்றி உங்களைத் தேடி வரும். குடும்பத்தினரின் முழு ஆதரவோடு நிதி நிலைமை பெருமளவில் உயரும். மற்றவர்களுக்கு கடனாகக் கொடுத்து வராத பழைய பணம் கைக்கு வந்து சேரும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களின் பாராட்டைப் பெறுவீர்கள்; ஆரோக்கியமும் திருப்திகரமாக இருக்கும்.
- விருச்சிகம்: சூரியன் உங்கள் ராசிக்கு 11-ஆம் வீடான லாப ஸ்தானத்திற்குள் நுழைகிறார். இதனால் உங்கள் வாழ்வில் நீண்ட காலமாக நீடித்து வந்த பணப் பிரச்சினைகள் முற்றிலும் முடிவுக்கு வரும். முடங்கிக் கிடந்த காரியங்கள் மற்றும் தடைப்பட்ட வேலைகளை வெற்றிகரமாக முடிக்க நல்ல வாய்ப்புகள் தேடிவரும். வீட்டிற்குத் தேவையான ஆடம்பரப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியும் செழிப்பும் கூடுவதோடு, திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் அமைந்து திருமணம் கைகூடும்.
- கும்ப்ம்: சூரியன் உங்கள் ராசிக்கு 8-ஆம் வீட்டிற்குள் பிரவேசிக்கிறார். பொதுவாக எட்டாம் வீடு மறைமுக ஸ்தானமாக இருந்தாலும், இது உங்களுக்கு நிதி வளர்ச்சிக்கும் ஸ்திரத்தன்மைக்கும் சாதகமாக அமையப் போகிறது. எதிர்பாராத அதிர்ஷ்டப் பணம் மற்றும் பல வழிகளில் வருமானம் ஈட்டும் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பணியிடத்தில் நல்ல சூழல் நிலவி உங்கள் வேலைத்திறன் அதிகரிக்கும். புதிய சொத்துக்கள் அல்லது வாகனங்கள் வாங்குவதற்கு இது ஒரு பொன்னான காலமாகும்.
