DEVOTIONAL
அப்படிப்போடு..இனி தொட்டதெல்லாம் தங்கம் தான்..! குரு உதயத்தால் கோடீஸ்வர யோகத்தில் நனையப்போகும் 3 அதிர்ஷ்ட ராசிகள்.. இதில் உங்க ராசி இருக்கா..?
நவகிரகங்களில் சுபகிரகமாகவும் தேவர்களின் குருவாகவும் விளங்கும் குருபகவான், ஜோதிடக் கணக்கீடுகளின்படி தனது உச்ச ராசியான கடகத்தில் அஸ்தமன நிலையில் இருந்து பலமிழந்திருந்தார். இந்நிலையில், ஆகஸ்ட் 10, 2026 அன்று கடக ராசியில் குருபகவான் உதயமாகிறார். ஏற்கனவே உருவாகியுள்ள ‘ஹம்ஸ மகாபுருஷ ராஜயோகத்துடன்’ குருவின் இந்த உதய நிலை சேர்வதால், அவரது சுப பலன்கள் மேலும் பல மடங்கு அதிகரிக்கும். அனைத்து ராசிகளுக்கும் மாற்றங்கள் ஏற்பட்டாலும், சில குறிப்பிட்ட ராசிக்காரர்களுக்கு இந்த குரு உதயம் பெரும் யோகத்தையும் பொற்காலத்தையும் தரவுள்ளது.
கடக ராசி
முதல் வீட்டில் குருபகவான் உதயமாகி உலா வருவதால், கடக ராசியினருக்குத் தன்னம்பிக்கையும் தைரியமும் கணிசமாக அதிகரிக்கும். நீண்ட நாட்களாகத் தங்கிப்போயிருந்த அனைத்துப் பணிகளும் சுலபமாக நிறைவேறுவதுடன், உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்க்கும் பதவி உயர்வும் ஊதிய உயர்வும் தேடிவரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் மூலம் சிறப்பான வருமானம் கிடைப்பதுடன், சமூகத்தில் உங்களது ஆளுமைக்கும் திறமைக்கும் உரிய அங்கீகாரமும் மரியாதையும் கிடைக்கும். நிதி நிலைமை வலுவடைந்து, உடல் ஆரோக்கியமும் மன அமைதியும் மேம்படும்.
கன்னி ராசி
லாப ஸ்தானமான 11ஆம் வீட்டில் குருபகவான் உதயமாகி அருள்பாலிப்பதால், எதிர்பாராத யோகங்களும் திடீர் பணவரவுகளும் வந்து சேரும். வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் அசாத்திய லாபத்தைச் சந்திப்பதுடன், வருமானம் பல வழிகளில் பெருகத் தொடங்கும். நீண்ட நாட்களாக முடங்கிக் கிடந்த பல்வேறு சிக்கல்கள் மற்றும் கடன் பிரச்சனைகளில் இருந்து விடுதலை கிடைக்கக் கூடிய சூழல் உருவாகும். சுறுசுறுப்பும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும் இந்த காலகட்டத்தில், கன்னி ராசியினர் தொட்டதெல்லாம் துலங்கும் வகையில் நன்மைகள் வரிசைகட்டி நிற்கும்.
தனுசு ராசிக
8ஆம் வீட்டில் குரு உதயம் அடைவதால், ஆயுள் பலம் கூடுவதோடு திடீர் அதிர்ஷ்டங்கள் மற்றும் சொத்துச் சேர்க்கைக்கான வாய்ப்புகள் உருவாகும். நீங்கள் செய்த பழைய முதலீடுகள் அனைத்தும் தற்போது எதிர்பார்த்ததை விட கூடுதல் லாபத்தைக் கொடுக்கும். செல்வாக்கு மிக்க முக்கிய நபர்களின் நட்பு கிடைத்து, வாழ்க்கையில் அடுத்தகட்டத்திற்கு முன்னேறுவதற்கான கதவுகள் திறக்கும். குடும்ப உறவுகளுக்குள் இருந்த மனக்கசப்புகள் நீங்கி, அன்பும் அமைதியும் நிலவும் இந்த வேளையில், சமூகத்தில் புகழும் கௌரவமும் உயரும்.
