DEVOTIONAL
அடி தூள்..! ஆடி மாசக் கனவுல அம்மன் வந்தா.. இவ்ளோ நல்ல விஷயம் நடக்குமா..? உங்களுக்கு இப்படி கனவு வந்துருக்கா..?!
ஆன்மீக சிறப்புமிக்க ஆடி மாதத்தில் அம்மன் கனவில் வருவது மிகவும் மகத்துவமான ஒன்றாகக் கருதப்படுகிறது. அம்மன் கனவில் தோன்றும்போது அவர் எந்த வடிவில் வருகிறார் என்பதைப் பொறுத்து பலன்கள் மாறுபடுகின்றன. சிரித்த முகத்துடனோ, ஆசி வழங்குவது போலோ அல்லது கோயிலில் வீற்றிருப்பது போலோ கனவு கண்டால் தெய்வ அருள் கிடைப்பதுடன், மனதிலுள்ள பயம், கவலைகள் மற்றும் குழப்பங்கள் அனைத்தும் நீங்கும்.
அம்மன் கோயிலில் தீபம் எரிவது, பூக்கள் மற்றும் குங்குமம் இருப்பது போன்ற கனவுகள் வீட்டில் மங்களகரமான மாற்றங்களையும் மன அமைதியையும் தரும். மேலும், அம்மன் சிலையை கனவில் கண்டால் நீண்ட நாட்களாகத் தடையாகி நின்ற காரியங்கள் அனைத்தும் தடையின்றி சிறப்பாகச் சுபமாக நிறைவேறும். வேப்பிலை அல்லது வேப்ப மரத்தைக் கனவில் கண்டால் குலதெய்வத்தின் அருள் கிடைத்து வாழ்வில் மகிழ்ச்சியும் செழிப்பும் உண்டாகும்.
அம்மன் கோயிலைக் காண்பது அல்லது கோயிலுக்குள் செல்வது போன்ற கனவுகள் வாழ்வில் உள்ள துன்பங்களைப் போக்கும். அம்மனுக்குத் தீபாராதனை காட்டுவது அல்லது அம்மன் அலங்காரம் நடைபெறுவது போல கனவு கண்டால் விரைவில் நல்ல சுபச் செய்திகள் வந்து சேரும். திருமணத்திற்காகக் காத்திருப்பவர்களுக்கு விரைவாகத் திருமண யோகம் கை கூடிவரும் என்பதையும் இக்கனவுகள் உணர்த்துகின்றன.
