CRIME
“அடச்சீ… இந்த வயசுலயும் இப்படியா..?!” தகாத வார்த்தைகளுடன் காதல் கடிதம்… 13 வயது சிறுமிக்கு பாலியல் சீண்டல் கொடுத்த 48 வயது காம கொடூரன்.. வெளிவந்த பதைபதைக்கும் சம்பவம்..!!
தருமபுரி பிடமனேரி பகுதியில் 48 வயதான நபிஷா என்பவர் ஆட்டோ ஓட்டிவருகிறார். இவர் பள்ளி மாணவர்களை தினமும் ஆட்டோவில் அழைத்துச் செல்லும் பணியில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், அவரது ஆட்டோவில் வழக்கமாகப் பயணம் செய்து வந்த 13 வயது அரசுப் பள்ளி மாணவியிடம் நபிஷா பாலியல் சீண்டலில் ஈடுபட்டதுடன், ஆபாசமான மற்றும் தகாத வார்த்தைகள் அடங்கிய காதல் கடிதம் ஒன்றையும் கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அம்மாணவி, இச்சம்பவம் குறித்துத் தனது பள்ளி ஆசிரியரிடம் உடனடியாகத் தெரிவித்துள்ளார்.
மாணவி அளித்த தகவலின் பேரில், ஆசிரியர் குழந்தைகள் உதவி மையத்தின் எண்ணுக்குத் தகவல் அளித்தார். அதைத் தொடர்ந்து, மாவட்ட குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் மாணவியிடம் நேரில் விசாரணை நடத்திச் சம்பவத்தை உறுதிசெய்தனர். பின்னர், மாணவியின் புகாரின் அடிப்படையில் தருமபுரி அனைத்து மகளிர் காவல் நிலையப் போலிசார் நபிஷா மீது போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
