“கணவனுடன் போனில் சண்டை…” ஆத்திரத்தில் 2 பிஞ்சு குழந்தைகளை கிணற்றில் வீசிய பெற்ற தாய்.. நெஞ்சை நடுங்க வைக்கும் கொடூரம்..!! – cinefeeds
Connect with us

CRIME

“கணவனுடன் போனில் சண்டை…” ஆத்திரத்தில் 2 பிஞ்சு குழந்தைகளை கிணற்றில் வீசிய பெற்ற தாய்.. நெஞ்சை நடுங்க வைக்கும் கொடூரம்..!!

Published

on

கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் பெர்னே கிராமத்தில், கணவருடன் ஏற்பட்ட போன் தகராறில் ஆத்திரமடைந்த நூருன்னிசா (28) என்ற இளம் பெண், தனது 3½ வயது மகன் மற்றும் கணவரின் சகோதரரின் 3 வயது மகன் ஆகிய இரு குழந்தைகளையும் கிணற்றில் தூக்கி வீசிய கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. நூருன்னிசா தனது கணவருடன் செல்போனில் பேசிக் கொண்டிருந்தபோது இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தத் தகராறின் விளைவாக ஏற்பட்ட அசாத்திய ஆத்திரத்தில், வீட்டின் அருகே இருந்த கிணற்றுக்குள் இரு பிஞ்சு குழந்தைகளையும் அவர் கொடூரமாகத் தூக்கி வீசியுள்ளார்.

குழந்தைகள் கிணற்றில் விழுந்த சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், உடனடியாக கிணற்றில் இறங்கி இரு குழந்தைகளையும் மீட்டனர். இருப்பினும், மீட்கப்பட்ட சிறிது நேரத்திலேயே நூருன்னிசாவின் கணவரின் சகோதரரின் 3 வயது மகன் பரிதாபமாக உயிரிழந்தான். உயிருக்கு அவதிப்பட்ட நூருன்னிசாவின் 3½ வயது மகன் உடனடியாக மங்களூருவில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு, அங்கு அவசரச் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இக்கொடூரச் சம்பவம் தொடர்பாக உப்பினங்கடி போலீசார் வழக்குப் பதிவு செய்து, பெற்ற தாயான நூருன்னிசாவைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in