“பள்ளிக்குச் சென்றவள் திரும்பவில்லை..!” 21 வயது வாலிபருடன் மாயமான பள்ளி மாணவி.. ரயில் தண்டவாளத்தில் காத்திருந்த அந்தப் பயங்கர அதிர்ச்சி.. கதறும் பெற்றோர்..!! – cinefeeds
Connect with us

CRIME

“பள்ளிக்குச் சென்றவள் திரும்பவில்லை..!” 21 வயது வாலிபருடன் மாயமான பள்ளி மாணவி.. ரயில் தண்டவாளத்தில் காத்திருந்த அந்தப் பயங்கர அதிர்ச்சி.. கதறும் பெற்றோர்..!!

Published

on

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில், மாயமான 10-ம் வகுப்பு மாணவியும் அவரது உறவினரான வாலிபரும் அங்கமாலி ரயில் நிலையம் அருகே ரயில் முன் பாய்ந்து கொடூரமான முறையில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கொல்லம் மாவட்டம் கண்ணநல்லூர் பகுதியைச் சேர்ந்த அபிலாஷ் (21) மற்றும் அவரது உறவினரான வளவஞ்சால் பகுதியைச் சேர்ந்த 15 வயது விஸ்மையா ஆகிய இருவருமே இந்த விபரீத முடிவை எடுத்தவர்கள் ஆவர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பள்ளிக்கூடம் செல்வதாகக் கூறிச் சென்ற விஸ்மையா பின்னர் வீடு திரும்பவில்லை, அதே நேரத்தில் அபிலாஷும் காணாமல் போனதால் உறவினர்கள் கண்ணநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர்.

போலீசார் இவர்களைத் தேடி வந்த நிலையில், சம்பவத்தன்று நள்ளிரவு 1:45 மணியளவில் அங்கமாலி ரயில் நிலையத்தில் திருச்சூர் எக்ஸ்பிரஸ் ரயில் மோதி ஒரு சிறுமியும் வாலிபரும் பிணமாகச் சிதறிக் கிடப்பதாகத் தகவல் கிடைத்தது. ரயில்வே பாதுகாப்புப் படையினரும் அங்கமாலி போலீசாரும் நடத்திய விசாரணையில், இறந்து கிடந்தது மாயமான அபிலாஷ் மற்றும் விஸ்மையா என்பது உறுதி செய்யப்பட்டது. அவர்களது உடல்கள் அங்கமாலி அரசு தாலுகா மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இவர்கள் இருவரும் காதல் விவகாரத்தில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்களா அல்லது எதிர்பாராதவிதமாக ரயிலில் அடிபட்டு இறந்தார்களா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in