LATEST NEWS
இவர் தான் சார் ரியல் ஹீரோ..! ஓடும் ரயிலில் இருந்து விழவிருந்த பயணி… தேவ தூதனாய் வந்து காப்பாற்றிய ஆர்.பி.எஃப் காவலர்.. வைரலாகும் பகீர் வீடியோ..!!
மும்பை ஜோகேஸ்வரி ரயில் நிலையத்தில் ஓடும் லோக்கல் ரயிலில் ஏற முயன்றபோது நிலைதடுமாறி, ரயிலுக்கும் பிளாட்பாரத்திற்கும் இடையே உள்ள ஆபத்தான இடைவெளியில் விழவிருந்த பயணியை ரயில்வே பாதுகாப்புப் படை காவலர் நொடிப் பொழுதில் காப்பாற்றியுள்ளார். செப்டம்பர் 16 அன்று இரவு நேரத்தில் நடந்த இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
சம்பவத்தன்று இரவுப் பணியில் இருந்த காவலர் நாகேஷ் மோஹித்தே அந்தப் பயணி ரயிலின் வேகத்தால் இழுத்துச் செல்லப்படுவதைக் கண்டவுடன் துரிதமாகச் செயல்பட்டு, அவரைப் பிளாட்பாரத்தை நோக்கி இழுத்துக் காப்பாற்றினார். அப்போது அங்கு நின்றிருந்த மற்றொரு ஆர்.பி.எஃப் காவலரும் உடனடியாக ஓடிவந்து பயணியை மீட்பதில் உதவினார். இவர்களின் இந்த சாதுரியமான மற்றும் விரைவான செயலால் ஒரு பெரும் உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டது.
இந்தத் துணிச்சலான மீட்பு வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி மிக வேகமாக வைரலாகி வருகிறது. காவலர் நாகேஷ் மோஹித்தே மற்றும் சக காவலரின் சமயோசித புத்தியையும், கடமை உணர்வையும் நெட்டிசன்கள் பலரும் சமூக வலைதளங்களில் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர். அதேவேளையில், நகரும் ரயில்களில் ஏறுவது அல்லது இறங்குவது போன்ற ஆபத்தான செயல்களில் பொதுமக்கள் யாரும் ஈடுபட வேண்டாம் என ரயில்வே நிர்வாகம் மீண்டும் எச்சரித்துள்ளது.
