கல்யாணமாகி 6 மாசத்துல இப்படியா ..? கணவனின் ரகசிய உறுப்பைக் கடித்த மனைவி… மனைவியின் மூக்கைத் துண்டித்த கணவன்… மாத்தி மாத்தி ஒரே சண்டை..!! – cinefeeds
Connect with us

CRIME

கல்யாணமாகி 6 மாசத்துல இப்படியா ..? கணவனின் ரகசிய உறுப்பைக் கடித்த மனைவி… மனைவியின் மூக்கைத் துண்டித்த கணவன்… மாத்தி மாத்தி ஒரே சண்டை..!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் ஹர்தோய் மாவட்டத்தில், குடும்பத் தகராறில் கணவன் மற்றும் மனைவி ஒருவரையொருவர் பற்களால் கடித்துக் குதறிய வினோதமான மற்றும் அதிர்ச்சியூட்டும் வன்முறைச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சாண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் தீபக் மற்றும் சாதனா தம்பதியினருக்கு இடையேதான் இந்தத் தகராறு ஏற்பட்டுள்ளது. 6 மாதங்களுக்கு முன்புதான் இவர்களுக்குத் திருமணம் நடந்துள்ளது.

இவர்களுக்குள் ஏற்பட்ட குடும்பப் பிரச்சினையில், ஆத்திரமடைந்த மனைவி சாதனா தனது கணவர் தீபக்கின் ரகசிய உறுப்பை பற்களால் கடித்துக் குதறியுள்ளார். இதற்குப் பழிவாங்க நினைத்த கணவர் தீபக்கும் சளைக்காமல், மனைவியின் மூக்கை பற்களால் கடித்துக் குதறித் துண்டித்துள்ளார். இந்த கொடூரத் தாக்குதலில் படுகாயமடைந்த தம்பதியினர் இருவருமே தற்போது மீட்கப்பட்டு இரத்தக் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், திருமணமான சில நாட்களிலேயே சாதனா தனது கணவருடன் சண்டையிட்டுப் பெற்றோர் வீட்டிற்குச் சென்றதாகவும், பின்னர் சில காலம் தனது மைத்துனருடன் வாழ்ந்ததாகவும் கணவர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தற்போது அவர் மீண்டும் வலுக்கட்டாயமாகத் தன் வீட்டிற்கு வந்து தங்கியதால் ஏற்பட்ட வாக்குவாதமே இந்த அளவுக்கு முற்றியதாகத் தெரிகிறது. இரு தரப்பினரின் புகார்களையும் பெற்றுக்கொண்ட போலீசார், மருத்துவ அறிக்கை வந்த பிறகு அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in