“அக்கா நீ பண்ணுறது தப்பு” அவனுக்கு கல்யாணம் ஆகிடுச்சு… காதலை கண்டித்த தங்கை… ஆத்திரத்தில் வாய்க்காலில் கொன்று வீசிய கொடூரம்… கரூரில் அதிர்ச்சி..!! – cinefeeds
Connect with us

CRIME

“அக்கா நீ பண்ணுறது தப்பு” அவனுக்கு கல்யாணம் ஆகிடுச்சு… காதலை கண்டித்த தங்கை… ஆத்திரத்தில் வாய்க்காலில் கொன்று வீசிய கொடூரம்… கரூரில் அதிர்ச்சி..!!

Published

on

கரூர் மாவட்டம் நெரூர் வடபாகம் பகுதியைச் சேர்ந்த திருமணமான மோகன்ராஜ், தன் திருமண வாழ்க்கையை மறைத்து வெங்கமேடு பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருடன் பழகி வந்துள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் இவர்களின் ரகசிய பழக்கத்தை அந்த இளம்பெண்ணின் 17 வயது தங்கை நேரில் பார்த்துள்ளார். இதனால் அவர்களுக்குள் கடுமையான தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 17-ஆம் தேதி முதல் அந்தச் சிறுமி திடீரென மாயமாகியுள்ளார். இதுகுறித்து சிறுமியின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் வெங்கமேடு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். சந்தேகத்தின் அடிப்படையில் மோகன்ராஜிடம் நடத்திய விசாரணையில், தங்களின் ரகசிய விவகாரம் வெளியில் தெரிந்துவிடும் என்ற ஆத்திரத்தில் அவர் சிறுமியைக் கொலை செய்து வாய்க்காலில் வீசிய திடுக்கிடும் உண்மை வெளிவந்தது.

Advertisement

இதையடுத்து, வெங்கமேடு – வாங்கல் சாலை பகுதியில் உள்ள வாய்க்காலில் தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் போலீசார் சுமார் 5 மணி நேரம் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது வாய்க்காலில் இருந்து அழுகிய நிலையில் மீட்கப்பட்ட சிறுமியின் உடலை உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர். இந்தத் கொடூரக் கொலைச் சம்பவம் தொடர்பாக மோகன்ராஜ் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த அவரது காதலி ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in