கொடூரம்..! அதிகாலையில் கேட்ட அழுகை சத்தம்… ஆடைகள் கிழிந்த நிலையில் தவித்த இளம்பெண்… CCTV வில் பதிவான காட்சிகள்… அதிர்ச்சியில் உறைந்த குடியிருப்புவாசிகள்…!! – cinefeeds
Connect with us

CRIME

கொடூரம்..! அதிகாலையில் கேட்ட அழுகை சத்தம்… ஆடைகள் கிழிந்த நிலையில் தவித்த இளம்பெண்… CCTV வில் பதிவான காட்சிகள்… அதிர்ச்சியில் உறைந்த குடியிருப்புவாசிகள்…!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தின் ராஜ்நகர் எக்ஸ்டென்ஷன் பகுதியில் உள்ள ‘கே.டபிள்யூ சிருஷ்டி சொசைட்டி’ குடியிருப்பு வளாகத்தில், கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி அதிகாலையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. அங்குள்ள ‘ஏ’ டவரில் இளம் பெண் ஒருவர் ஆடைகள் கிழிந்த நிலையில், அழுதுகொண்டே சுமார் 10 நிமிடங்களுக்கும் மேலாகத் தவிப்புடன் சுற்றியுள்ளார்.

அதிகாலை 5 மணி அளவில் அங்குள்ள ஒரு வீட்டின் கதவைத் தட்டிய அந்தப் பெண், தமக்கு உடுத்துவதற்கு ஆடைகள் கேட்டுள்ளார். அந்த வீட்டுப் பெண்மணி ஆடைகளை எடுத்துக் கொண்டு வருவதற்குள், அந்த இளம்பெண் அங்கிருந்து அவசரமாகப் புறப்பட்டுச் சென்றுவிட்டார். அவர் லிஃப்ட் மூலமாக அடித்தளத்திற்கு சென்று வெளியேறும் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவிலும் பதிவாகியுள்ளன. 17-வது மாடியில் உள்ள ஒரு பிளாட்டில் 3 முதல் 4 இளைஞர்கள் தமக்கு இழைத்த கூட்டுப் பாலியல் வன்கொடுமையே இதற்குக் காரணம் என அப்பகுதி மக்கள் மற்றும் குடியிருப்புவாசிகள் நந்த்கிராம் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனர்.

Advertisement

இந்தக் கொடூரச் சம்பவம் நடந்து மூன்று நாட்களுக்கு மேலாகியும், காவல்துறையினர் இதுவரை முதல் தகவல் அறிக்கை (FIR) கூட பதிவு செய்யவில்லை என்றும், முறையான விசாரணையைத் தொடங்கவில்லை என்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், இந்த விவகாரத்தை மூடிமறைக்கும் நோக்கில், பாதிக்கப்பட்டோர் தரப்பில் அளிக்கப்பட்ட புகாரையே மாற்றித் தருமாறு காவல்துறையினர் அழுத்தம் கொடுத்து வருவதாகக் குடியிருப்புவாசிகள் தரப்பில் கடும் அதிருப்தி தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in