CRIME
அடச்சீ… மனுஷனுங்களா இவனுங்க..?! சிறுமியை சீரழிச்சுட்டு மீண்டும் DJ ஆட்டத்திற்குச் சென்ற மிருகங்கள்… நடுங்க வைக்கும் பின்னணி..!!
ஜார்ஜ்கண்ட் மாநிலம் சத்ரா மாவட்டத்தில் உள்ள குந்தா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், சிறுமி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறை தகவலின்படி, கடந்த செப்டம்பர் 14 அன்று டீஜ் பண்டிகையை முன்னிட்டு கிராமத்தில் டி.ஜே இசை நிகழ்ச்சி நடைபெற்றுக்கொண்டிருந்தது. அந்நிகழ்ச்சியைக் காண வந்த சிறுமியை, இரு இளைஞர்கள் இருளைப் பயன்படுத்தி ஆள்நடமாட்டம் இல்லாத புதர் பகுதிக்கு பலவந்தமாக கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பின்னர், தாங்கள் மாட்டிக்கொள்வோம் என்ற பயத்தில் சிறுமியின் கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டு, உடலை புதர்களுக்குள் வீசிவிட்டு மீண்டும் டி.ஜே நிகழ்ச்சிக்குத் திரும்பியுள்ளனர்.
செப்டம்பர் 15 அன்று பேசரா கிராமத்திற்கு அருகே புதரில் சிறுமியின் சடலம் கிடப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில், குந்தா காவல் நிலையப் போலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலைக் கைப்பற்றி விசாரணை தொடங்கினர். தடயவியல் குழுவினர் சம்பவ இடத்திலிருந்து முக்கியச் சான்றுகளைச் சேகரித்த பின், உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. வழக்கின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, தொழில்முறை மற்றும் தடயவியல் சான்றுகள் மற்றும் கள விசாரணை தகவல்களின் அடிப்படையில் போலிஸார் குற்றவாளிகளைத் தீவிரமாகத் தேடி வந்தனர்.
இந்த கொடூரச் சம்பவத்தில் தொடர்புடைய கமலேஷ் பாரதி மற்றும் மனோஜ் குமார் ஆகிய இரு பிரதிவாதிகளைப் போலிஸார் கைது செய்தனர். விசாரணையில் இருவரும் தங்களது குற்றத்தை ஒப்புக் கொண்டதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும், கைதான குற்றவாளிகள் அளித்த தகவலின் பேரில் சிறுமியின் சிவப்பு நிற டார்ச் லைட், ஹேர் பின், சம்பவத்தின் போது குற்றவாளிகள் அணிந்திருந்த ஆடைகள் மற்றும் ஒரு மொபைல் போன் ஆகியவற்றை போலிஸார் பறிமுதல் செய்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக போக்சோ சட்டம் உள்ளிட்ட கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, மேலதிக விசாரணைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
